»   »  மகளிர் தினத்தில் சந்தோஷ் நாராயணின் அம்மா பாடகியானார்.. அவர் சந்தோஷமானார்!

மகளிர் தினத்தில் சந்தோஷ் நாராயணின் அம்மா பாடகியானார்.. அவர் சந்தோஷமானார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நேரத்தில், தனது அம்மாவைப் பாடகியாக்கி மகிழ்ந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறியிருக்கும் சந்தோஷ் நாராயாணன், வரிசைகட்டி நிற்கும் படங்களால் இரவுபகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இறைவி, கபாலி, விஜய் 60 என்று தொடர்ந்து பிஸியாக இருக்கும் சந்தோஷ், நேற்றுடன் இறைவி படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்திருக்கிறார்.

இறைவி என்று பெண்ணின் பெயரை வைத்திருக்கும் இப்படத்தின் இசைப் பணிகளை, நேற்று மகளிர் தினத்தில் இவர் முடித்துக் கொடுத்திருக்கிறார்.

மேலும் தனது அம்மாவை இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலையும் நேற்று பாட வைத்திருக்கிறார். இதுகுறித்து "அவர் இறைவி படத்தின் பணிகளை, பெண்கள் குறித்த வலிமையான பாடலுடன் முடித்திருக்கிறேன்.

விவேக் எழுதிய இந்தப் பாடலை எனது அம்மா பாடியிருக்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார். பீட்ஸா, ஜிகர்தண்டா படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் இறைவி.

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி மற்றும் கமாலினி முகர்ஜி என்று முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் இறைவி உருவாகியிருக்கிறது.

எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை, படக்குழு விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sandhosh Narayanan Tweeted "wrapped up #iraivi with a powerful song abt women sung by my dear amma".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil