கல்யாணத்தில் விருப்பம் இல்லை.. குழந்தை பெத்துக்க மாட்டேன்.. சீரியல் நடிகை சந்தியா!
சென்னை: தமிழில் அத்திப் பூக்கள், சந்திரலேகா, வம்சம் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார். இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சந்தியா ராகம் என்ற தொடரில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் எமது சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தனது சொந்த வாழ்க்கை குறித்து மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார்.
கேள்வி: திருமணம் செய்து கொள்ளாமல் இன்னும் ஏன் சிங்கிளாக இருக்கிறீர்கள்.
பதில்: யாரும் கிடைக்காததால் நான் சிங்கிளாக இல்லை, திருமணம் வேண்டாம் என்பதற்காகத்தான் நான் சிங்கிளாக இருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற ஒரு முடிவில் இருக்கிறேன். நான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றால் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று பலர் சொல்வார்கள். ஆனால், நான் இப்போது சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். சீரியலில் எப்பொழுதுமே வாய்ப்பு வந்து கொண்டு இருக்கும் என்று சொல்ல முடியாது. திடீரென வாய்ப்பு இல்லாமல் கூட போகலாம். இன்றைய காலகட்டத்தில் படிப்பிற்கும், மருத்துவத்திற்குமே அதிகப்படியான செலவு ஆகிறது. அவர்களுக்கு நல்லது செய்வதாக நினைத்து குழந்தைகளை தத்து எடுத்துவிட்டு, அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நான் ஓட முடியுமா? இதனால் என் மூலமாக இந்த உலகத்திற்கு ஒரு உயிரை கொண்டு வருவதில் எனக்கு விருப்பமே இல்லை. ஏனென்றால் இந்த உலகம் மிகவும் மோசமாக உலகம், முடிந்தவரை ஜனத்தொகையை குறைக்க வேண்டும். அதை அதிகரித்து கொண்டே போகக்கூடாது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். அதற்காகத்தான் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாக இருக்கிறேன்.

ஏற்கனவே என்னுடைய முதல் திருமண வாழ்க்கையில் நான் நிறைய அடிபட்டுவிட்டேன். அது எனக்கு செட் ஆகவில்லை. எனக்காக என்னுடன் தூண் போல நிற்கக்கூடிய ஒருவர், என்னுடைய கருத்திருக்கும், என்னுடைய சுதந்திரத்திற்கும் அவரால் எந்தவித தடையும் வராமல் அவர் எனக்கானவராக இருக்க வேண்டும் அப்படிப்பட்ட ஒருவரை நான் சந்தித்தால் நிச்சயமாக நான் இரண்டாம் திருமணம் செய்து கொள்வேன். ஆனால், அப்படிப்பட்டவர் இதுவரை என் வாழ்க்கையில் வரவில்லை.
கேள்வி: முதல் கணவரை பிரிய என்ன காரணம்?
பதில்: நிச்சயதார்த்தத்திற்கு பிறகு எங்களுக்குள் கருத்து வேறுபாடு வர ஆரம்பித்துவிட்டது. எங்களுடைய நிச்சயதார்த்தமே மிகவும் கிராண்டாக சீரியல் நடிகர்கள் சொந்த பந்தங்கள் என அனைவரையும் அழைத்து தான் நடந்தது. நிச்சயத்திற்கு பிறகு என்னுடைய ஃபோனை அவர் பார்த்து விட்டு என்னிடம் சண்டை போட்டார். யாரோ ஒருவர் அனுப்பிய மெசேஜை பார்த்துவிட்டு பெரிய பிரச்சனை ஆக்கிவிட்டார். அதில், தவறாக எதுவும் இல்லை. உங்களுடைய சீரியலை நான் பார்த்தேன், நன்றாக இருந்தது என்று தான் அனுப்பி இருந்தார். அதற்கு நான் ரிப்ளை கூட செய்யவில்லை. அதை வைத்து மிகப்பெரிய சண்டையை உருவாகி விட்டார். திருமணமான ஒரு வருடத்திலேயே எனக்கு அவரைப் பற்றி எல்லாமே தெரிந்து விட்டது. நான் எதிர்பார்த்தது போல அவர் இல்லை, அவர் எதிர்பார்த்தது போல நான் இல்லை என புரிந்து கொண்டு அந்த வாழ்க்கையில் இருந்து விலகி வந்துவிட்டேன்.


Click it and Unblock the Notifications











