»   »  அரசியலில் இறங்காமலேயே முதலமைச்சராக ஆசைப்படும் கஞ்சா கருப்பு

அரசியலில் இறங்காமலேயே முதலமைச்சராக ஆசைப்படும் கஞ்சா கருப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: நான் முதலமைச்சராகவே ஆசைப்படுகிறேன் என்று நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்திருக்கிறார்.

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தற்போது சண்டிக்குதிரை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது.

அங்குள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் கஞ்சா கருப்பு சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டன.

Sandi Kuthirai Shooting Spot

படப்பிடிப்பிற்கிடையே பத்திரிக்கையாளர்களுக்கு கஞ்சா கருப்பு பேட்டியளித்தார். அதில் சில அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு "எல்லா நடிகர்களுமே இப்ப தேர்தல் பிரசாரத்துக்கு வாராங்க.

வருவதில் தப்பில்லை. ஆனா என்னை யாரும் கூப்பிடல. கூப்பிட்டா வந்து பிரச்சாரம் செய்யனும்ன்னு நிறைய ஆசை இருக்கு.

யார் கூப்பிட்டாலும் போறதுக்கு என்னை என்ன வாஜ்பாய்யா கூப்பிடப் போறாரு? இல்லை அம்மா தான் கூப்பிடப் போறாங்களா? என்று கலகலப்புடன் பதிலளித்தார்.

கடைசியாக நிருபர் ஒருவர் தி.மு.க, அ.தி.மு.க பிரசாரத்துக்கு கூப்பிட்டா போவீங்களா? என்று கேட்டதற்கு "நான் முதலமைச்சரா ஆகத்தான் ஆசைப்படுறேன்" என்று சொல்லி ஆளைவிடுங்க என்று கும்பிட்டு விடை பெற்றுக் கொண்டார்.

இக்கோயிலின் முன்பு உள்ள குதிரை சிலை (33 அடி) ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Comedy Actor Ganja Karuppu says in Recent Interview "I Wish the Chief Minister".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil