»   »  செல்ஃபியின் ஆபத்தை விளக்கும் சண்டிக்குதிரை!

செல்ஃபியின் ஆபத்தை விளக்கும் சண்டிக்குதிரை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

செல்ஃபியின் ஆபத்தை விளக்கும் வகையில் ஒரு புதிய படம் உருவாகிறது. படத்துக்கு சண்டிக்குதிரை என்று தலைப்பிட்டுள்ளனர்.

சன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார்.

Sandikuthirai on selfie habit

சின்னத்திரையில் பிரபலமான இவர் இப்போது பெரிய திரையில் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஏற்கெனவே அவர் மேல்நாட்டு மருமகன் என்ற படத்திலும் நாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார்.

Sandikuthirai on selfie habit

பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் - வாரஸ்ரீ.. இவர் இதுவரை 6000 பக்தி பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 'நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா...' என்று எஸ்பி பாலசுப்பிரமணியன் பாடிய பக்திப் பாடல் இவர் எழுதியதுதான். இவர் இசையமைக்கும் முதல் படம் இது.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் - அன்புமதி. இவர் பல பத்திரிக்கைகளில் 350 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி உள்ளார். அத்துடன் எல்லா பிரபலமான தொலைக்காட்சிகளிலும் இயக்குநராக, கதாசிரியராக பணியாற்றி இருக்கிறார். நிறைய விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார்.

Sandikuthirai on selfie habit

சண்டிக்குதிரை குறித்து அவர் கூறுகையில், "விஞ்ஞான வளர்ச்சி என்பது நன்மையும், தீமையும் கலந்தே இருக்கிறது. இன்று மொபைல் போன் இல்லாத ஆளே இல்லை. தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட மொபைல் போன் இன்று வேறு பரிமாணத்திற்கு மாறி விட்டது. அதன் இன்னொரு பக்கத்தை இதில் பதிவு செய்திருக்கிறோம். செல்பி என்கிற வியாதியின் கருப்புப் பக்கங்களை மிக நுணுக்கமான திரைக்கதை மூலம் உணர்த்தி உள்ளோம். புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.

காமெடி கலந்த திகில் படமாக சண்டிக்குதிரை உருவாகி உள்ளது," என்றார்.

English summary
Debutant director Anbumathi is making a movie on the evils Selfie habit.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil