twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனி மனித ஒழுக்கத்தைப் பற்றிப் பேசும் சண்டியர்!

    By Shankar
    |

    தலைமைக்கு வர விரும்புவோருக்கு தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பேசும் படமாக வரவிருக்கிறது சண்டியர்.

    எம்.கே.எஸ் பிலிம்ஸ் வழங்கும் உயிர்மெய் புரொடக்ஷன்ஸ் எஸ்.சங்கர்பிரசாத், கே.எஸ்.செந்தில்குமாருடன் இணைந்து தயாரிக்கும் படம் இந்த சண்டியர்.

    புதுமுகங்கள்

    புதுமுகங்கள்

    இந்த படத்தில் ஜெகன் என்ற புதுமுகம் நடிக்கிறார்.இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது. கதாநாயகியாக புதுமுகம் கயல் அறிமுகமாகிறார்.

    வில்லனாக நாயகம், டி.ரவி, சிங்கம்புலி, சிந்து, முருகதாஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    சோழதேவன்

    சோழதேவன்

    ஹரிபாஸ்கர் ஒளிப்பதிவு செய்ய, யதீஷ் மகாதேவ் இசையமைக்கிறார்.

    கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவர் சோழதேவன். இவர் இயக்குனர் ரமணா, விஜி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

    சண்டியர்

    சண்டியர்

    படம் பற்றி சோழதேவன் கூறுகையில், "சண்டியர் என்றால் அடிதடி செய்பவன் கெட்டவன் என்ற நினைப்பு நம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் என் சண்டியர் அப்படியல்ல இவன் வேற மாதிரி.

    ஒழுக்கமானவன்

    ஒழுக்கமானவன்

    இது தனி மனித ஒழுக்கம் பற்றிய கதை. தலைமை பெறுப்புக்கு வருபவன் ரொம்பவும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்கிற அறிய கருத்தை இதில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம்.

    நாயகம் என்பவர் வில்லனாக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு தஞ்சை மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

    ஜனரஞ்சகமான படமாக சண்டியர் உருவாகியுள்ளது," என்றார் இயக்குனர் சோழதேவன்.

    கமலுக்கு வந்த சோதனை

    கமலுக்கு வந்த சோதனை

    சில ஆண்டுகளுக்கு முன்பு சண்டியர் என்ற பெயரில் கமல் தன் படத்தை அறிவித்தபோது, அது சாதீயக் குறியீடாக இருப்பதாகக் கூறி புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி பெரும் போராட்டத்தை நடத்தியதும், பின்னர் அந்தப் படத்தை விருமாண்டி என கமல் பெயர் மாற்றி வெளியிட்டதும் நினைவிருக்கலாம்!

    English summary
    Debutant director Chola Devan is making a movie with all new faces in the name of Sandiyar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X