»   »  நிறைய அழுதுட்டேன், கஷ்டப்பட்டுட்டேன், அவரை பத்தி கேட்காதீங்க: காஜலின் முன்னாள் கணவர்

நிறைய அழுதுட்டேன், கஷ்டப்பட்டுட்டேன், அவரை பத்தி கேட்காதீங்க: காஜலின் முன்னாள் கணவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காஜல் பசுபதி பற்றி தன்னிடம் பேச வேண்டாம் என்று அவரின் முன்னாள் கணவர் சான்டி தெரிவித்துள்ளார்.

வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தவர் நடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான காஜல் பசுபதி. காயத்ரி இல்லாத குறையை நிவர்த்தி செய்து வருகிறார்.

இந்நிலையில் காஜல் பற்றி பேச வேண்டாம் என்று அவரின் முன்னாள் கணவர் சான்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

காஜல்

காஜல்

டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் காஜல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரும், டான்ஸ் மாஸ்டர் சான்டியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

குழந்தைகள்

குழந்தைகள்

காஜல், சான்டி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு சான்டி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம்

திருமணம்

சான்டி சில்வியா என்ற பெண்ணை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

முதல் மனைவி

முதல் மனைவி

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சான்டியிடம் காஜல் பற்றி கேட்க அவரோ பதில் அளிக்க மறுத்துவிட்டார். முதல் மனைவி மற்றும் கடந்த கால வாழ்க்கையை மறக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அழுகை

அழுகை

நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன், நிறைய அழுதுவிட்டேன் இனி என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். காஜலை பற்றி தயவு செய்து என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்று சான்டி தெரிவித்துள்ளார். சான்டி ரஜினியின் காலா படத்தில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dance master Sandy has asked media not to ask him anything about his former wife Kajal who is in Big Boss house now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil