Don't Miss!
- News
நெற்றியில் இருந்த ஆழமான காயம்.. வாணி ஜெயராமிற்கு நடந்தது என்ன? உடற்கூறாய்வு அறிக்கை சொல்வது என்ன?
- Technology
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
- Sports
இந்திய அணிக்கு 2 தமிழக வீரர்களுக்கு அழைப்பு.. ஆஸி.யை சமாளிக்க திட்டம்.. மொத்தம் 6 பேர் சேர்ப்பு
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தளபதி 67ல் விஜய்யுடன் இணையும் சாண்டி மாஸ்டர்... எது அந்த பீஸ்ட் வில்லன் மாதிரியா?
சென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன் வாரிசு திரைப்படத்தில் இருந்து சிம்பு குரலில் இரண்டாவது சிங்கிள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.
வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 67 பற்றிய எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.
சூப்பர்டா..
அவரும்
நம்ம
நண்பர்
தான..
ரெண்டு
படமும்
ஓடும்..
துணிவு
பற்றி
விஜய்
பேச்சு..
ஷாம்
பேட்டி!

வாரிசு டூ தளபதி 67
வாரிசு படத்தில் நடித்து முடித்துவிட்ட விஜய், அடுத்து தளபதி 67ல் நடிக்க ரெடியாகிவிட்டார். வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு பொங்கலுக்கு வெளியாகிறது. இதனால் வாரிசு இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், தளபதி 67 படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் பூஜையுடன் தொடங்கும் தளபதி 67, அதன் பின்னர் அபிஸியல் அப்டேட்டுடன் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், முதலில் தளபதி 67 படத்திற்கான டைட்டில் டீசரை ஷுட் செய்ய லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம்.

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்
தளபதி 67 திரைபடம் லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி ஆகியோரும் கேமியோ ரோலில் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து இதுவரை படக்குழ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தளபதி 67 சஞ்சய் தத், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லனாக நடிக்கலாம் என்ற செய்திகளும் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

விஜய்யுடன் சாண்டி மாஸ்டர்
தளபதி 67ல் விஜய்யுடன் இணையும் நடிகர்கள் நடிகைகள் பற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தளபதி 67 படத்தில் சாண்டி மாஸ்டரும் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக லோகேஷ் கனகராஜ்ஜின் படங்களுக்கு டான்ஸ் கோரியோகிராபி செய்து வரும் சாண்டி மாஸ்டர், இதுவரை அவரது படங்களில் நடித்தது இல்லை. ஆனால், தளபதி 67ல் அவருக்கு ஒரு சிறப்பான கேரக்டரை லோகேஷ் கிரியேட் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பீஸ்ட் வில்லன் மாதிரி ஆகிடாம
மல்டி ஸ்டார்ஸ் படங்கள் இயக்குவதில் லோகேஷ் கனகராஜ் கெட்டிக்காரர் என்றாலும், மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியா, ஸ்ரீமன் போன்ற பல கேரக்டர்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. ஆனால் அந்த குறை விக்ரம் படத்தில் இல்லாமல் பார்த்துக்கொண்டார். தளபதி 67 திரைப்படமும் பெரிய மல்டி ஸ்டார்ஸ் கான்செப்ட்டில் உருவாகவுள்ளதால், அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக அதில், சாண்டி மாஸ்டரும் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல், ரசிகர்களை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. விஜய்யின் பீஸ்ட் படத்தில் மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோவும் நடித்திருந்தார். ஆனால், திறமையான நடிகரான அவரை பீஸ்ட் படத்தில் மொக்கையாக பயன்படுத்தியிருந்தார் நெல்சன். அதுபோல தளபதி 67ல் சாண்டி மாஸ்டரும் நடித்துவிடப் போகிறார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.