For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'பேசுவியா, பேசுவியா'.. உருட்டுகட்டையால் வனிதாவின் வாயிலேயே அடித்த சாண்டி.. வெடித்து சிரித்த கவின்!

  |
  Bigg Boss Saravanan : சித்தப்பு வீட்டில் Function : கோவில் கட்டிய சித்தப்பு

  சென்னை: பிக் பாஸ் கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் அனைவரையும் கேலி செய்யும் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் வீடியோ வைரலாகியுள்ளது.

  மற்ற இரண்டு சீசன்களைவிட பிக் பாஸ் தமிழ் 3 தான் அதிக சர்ச்சைகள் மற்றும் பரபரப்புகளுடன் நடந்து முடிந்திருக்கிறது. முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை டிவிஸ்டு மேல் டிவிஸ்டு கொடுத்து, பார்வையாளர்களின் பிபியை ஏற்றினார் பிக் பாஸ்.

  அப்பாடா ஒருவழியாக பிக் பாஸ் முடிந்தது என ஆடியன்ஸ் பெருமூச்சு விடுவதற்குள், அடுத்த அதிரடியாக பிக் பாஸ் கொண்டாட்டம் வரப் போகிறது. பிக் பாஸ் கொண்டாட்டம் என்றதுமே எல்லோர் மனதிலும் வருபவர் சாண்டி தான்.

  சாண்டியின் மரண கலாய்

  சாண்டியின் மரண கலாய்

  கடந்த இரண்டு சீசன்களிலும் போட்டியாளர்கள் பேசிய டயலாக்குகள், வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து ஒரு பாட்டு தயார் செய்து, அதற்கு நடனமாடி செமையாக கலாய்த்தார். சாண்டியின் இந்த மரண கலாய் நடனம் மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

  5 செகண்ட் முன்னாடி

  5 செகண்ட் முன்னாடி

  பிக் பாஸ் முதல் சீசனின் ஹைலைட் ஜூலி, ஓவியா சண்டை தான். அதுவும் ஜூலி பேசிய 'ஒரு 5 செகண்ட் முன்னாடி' வசனம் மிகப் பிரபலம். அந்த வசனத்தை பாட்டாகவே படித்து, ரிப்பீட் மோடில் போட்டு சாண்டி செய்த ரகளைகள் கொஞ்சநஞ்சமல்ல. ஜூலி மட்டுமல்ல, சக்தி, கணேஷ், ஆரவ், சினேகன் என யாரையும் விட்டுவைக்காமல் வெச்சு செய்தார்.

  யாஷிகா, ஐஸ்வர்யா

  யாஷிகா, ஐஸ்வர்யா

  அதுபோல் இரண்டாவது சீசனில், பாலாஜி தலையில் ஐஸ்வர்யா குப்பை கொட்டியதை வைத்து கிண்டலாக நடனம் அமைத்தார். 'ஒன்னு குளிக்க மாட்டேன்னு சொல்லிச்சாம்' என யாஷிகாவை மரண கலாய் கலாய்த்தார். சாண்டியின் இந்த கலாய் நடனத்துக்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு.

  ரசிகர்கள் குழப்பம்

  ரசிகர்கள் குழப்பம்

  ஆனால் இம்முறை சாண்டியே பிக் பாஸ் போட்டியாளராகிவிட்டார். வீட்டிற்குள் இருந்தவரை மற்றவர்களை கேலி செய்து, பார்வையாளர்களை ஜாலியாக்கினார். இந்த முறை நடக்கும் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் சாண்டியின் கிண்டல் நடனம் இருக்குமோ இல்லையோ என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

  உற்சாகப்படுத்தும் புரொமோ

  உற்சாகப்படுத்தும் புரொமோ

  இந்த சூழலில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வெளியாகி இருக்கிறது பிக் பாஸ் கொண்டாட்டத்தின் புரொமோக்கள். வழக்கம் போல் இந்த முறையும் போட்டியாளர்களை கலாய்த்து நடனமாடுகிறார் சாண்டி. புரொமோவை பார்க்கும் போதே நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் தூண்டப்படுகிறது.

  சொர்ணாக்கா வனிதாக்கா

  சொர்ணாக்கா வனிதாக்கா

  பிக் பாஸ் கொண்டாட்டத்தில் நடனமாடும் சாண்டி முதலில் வம்புக்கு இழுப்பது வனிதாவை தான். "சொர்ணாக்காவே தோத்துட்டாங்க இவங்க பேச்சுல.. யம்மா வனிதாக்காக்கிட்ட வாயக்குடுத்தா எனக்கு மூச்சில்ல.. நல்லாருந்த குடும்பத்துல பத்தவெச்ச.. கடைசியாக போகும் போது வயிறு நிறைய சோறு வெச்ச", என பாடி ஆடி வனிதாவை வெச்சு செய்கிறார்.

  தர்ர்ர்ர்... தர்ஷன்

  தர்ர்ர்ர்... தர்ஷன்

  இதற்கு அடுத்து தர்ஷனிடம் வரும் சாண்டி, "டாஸ்க்குல தான் டாப்ல தான் வந்த தர்ஷனு... எல்லோரும் உசுப்பு ஏத்திவிட்டதால போய்ட்ட புஸ்சுன்னு", என தர்ராக்குகிறார். அடுத்தப்படி டைட்டில் வின்னர் முகெனை, "டேய் என்னாட இது பாட்டு பாடியே கப்ப வாங்கிட்டு போய்ட்டான்", என ஓட்டுகிறார்.

  பள்ளி சீருடை

  பள்ளி சீருடை

  இந்த பாடல் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்கின் போது கொடுக்கப்பட்ட சீருடையை அணிந்தபடியே சாண்டி நடனமாடுகிறார். இந்த புரொமோ வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. புரொமோவே இப்படி என்றால் மெயின் பிக்சர் இன்னும் மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

  பேசுவியா.. பேசுவியா..

  பேசுவியா.. பேசுவியா..

  இதேபோல் மற்றொரு புரொமோவில் பாட்ஷா பட சீனை சாண்டியும், வனிதாவும் சேர்ந்து நடித்துக் காட்டுகின்றனர். அதில், ரஜினியாக சாண்டியும், ஆனந்தராஜாக வனிதாவும் உள்ளனர். அப்போது வனிதாவைக் கட்டி வைத்து சாண்டி 'பேசுவியா பேசுவியா' என உருட்டுக்கட்டையால் அடிக்கிறார். இந்த காட்சியை பார்த்து சக போட்டியாளர்களான கவின், தர்ஷன் உள்ளிட்டோர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

  Read more about: sandy சாண்டி
  English summary
  A dance video of Sandy in Bigg boss kondattam, in which he trolls contestants goes viral in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X