திடிரென நிச்சயம் முடிந்துவிட்டது.. அடுத்த வாரம் திருமணம்.. சாண்டியின் எக்ஸ் வொய்ஃப் நடிகை அறிவிப்பு!
சென்னை: சாண்டியின் முன்னாள் மனைவியான காஜலுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்தவர் நடிகை காஜல் பசுபதி. சன் மியூஸிக், கலைஞர் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சி சேனல்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார்.
வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார் காஜல். அந்தப் படத்தில் நர்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல்.

காஜல் படங்கள்
தொடர்ந்து ட்ரீம்ஸ், இதய திருடன், டிஷ்யூம் , கள்வனின் காதலி, சுப்பிரமணியபுரம், சிங்கம், கோ, மவுன குரு, அதிதி, இரும்பு குதிரை, அழகு குட்டி செல்லம், பழைய வண்ணாரப்பேட்டை, ஆயிரத்தில் இருவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சாண்டியுடன் திருமணம்
கடைசியாக கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு 2 படத்தில் நடித்திருந்தார் காஜல். மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதன் கோரியோகிராஃபரான சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சாண்டி இரண்டாவது திருமணம்
ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்துக் கொண்டனர். 2018 ஆம் ஆண்டு சாண்டி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு லாலா என்ற பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.

சாண்டிக்கு ஆதரவு
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார் காஜல். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சாண்டி. சாண்டியை விவாகரத்து செய்து பிரிந்த போதும் பிக்பாஸில் பங்கேற்றிருந்த போது அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்தார் காஜல்.

இருவருக்கும் ஆதரவு
சாண்டியின் நண்பன் கவின் என்பதால் இருவரையும் கடைசி வரை ஆதரித்து வந்தார் நடிகை காஜல். அவர்களுக்காக மதுமிதா, மோகன் வைத்யா, வனிதா என பலரையும் விளாசினார். இதனால் சமூக வலைதளங்களில் பலரும் அவரை பின்தொடர தொடங்கினர்.

இரண்டாவது திருமணம்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை காஜல் அரசியல் சார்ந்த கருத்துக்களையும் அவ்வபோது தெரிவித்து வந்தார். இந்நிலையில் நடிகை காஜல் பசுபதி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

அடுத்த வாரம் திருமணம்
தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, திடிரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது....அடுத்த வாரம் திருமணம்....கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல .. தப்பா எடுத்துக்காதிங்க.. என பதிவிட்டுள்ளார்.

மாப்பிள்ளை யாரு?
இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிலர் மாப்பிள்ளை யாரு என்று கேட்டு வருகின்றனர். பலரும் திருமணத்தை கேன்சல் செய்யுங்கள் நமக்கு சரக்கு பார்ட்டி இருக்கு என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











