மகளை உருவகேலி செய்த நெட்டிசன்ஸ்… சரியான பதிலடி கொடுத்த சாண்டியின் மனைவி !
சென்னை : சாண்டியின் மகள் லாலாவை உருவக் கேலி செய்தவருக்கு சாண்டியின் மனைவி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
குழந்தையை பற்றி பாடி ஷேமிங் பண்றீங்களே, இதைப் பற்றி கேள்வி கேட்டால், பாடி ஷேமிங் ஆதரவாளர்கள் இந்த நபருக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
சில்வியாவின் இந்த பதிவுக்கு பலரும் தங்கள் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

மானாட மயிலாட நிகழ்ச்சியில்
நடன இயக்குனர் கலா மாஸ்டரின் மாணவர் சாண்டி. இவர் திரைப்படங்கள், நடன நிகழ்ச்சிகள் மேலும் பல மேடை நிகழ்ச்கிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டரிடம் உதவி நடன ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.

கிஸ் ஆப் டான்ஸ்
இதையடுத்து, தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். பின்னர் விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் நிகழ்ச்சியிலும், கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.

பிரபலமானார்
இதையடுத்தே அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அந்த வீட்டில் இருந்த அனைவரையும் தனது நகைச்சுவை உணர்வால் சிரிக்கவைத்தார். இதனால் மக்கள் மத்தியில் இவருக்கு பெரும் ஆதரவு பெற்று இறுதிவரை பிக் பாஸ் இல்லத்தில் இருந்தார். அந்த சீசனில் முதல் இடத்தை முகேன் ராவும், இரண்டாவது இடத்தை சாண்டியும் பெற்றனர்.

ஏன் இவ்வளவு குண்டு
சாண்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் லாலா மற்றும் மனைவி சில்வியாவுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இதேபோல, சாண்டியின் மனைவி சில்வியா தனது மகள் லாலாவின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை பார்த்த ஒரு பெண், குழந்தை ஏன் குண்டாக இருக்கிறது என்றும், ஒல்லியாக இருந்தால் தான் சாண்டி மாதிரி நன்றாக டான்ஸ் ஆட முடியும் என்று கேட்டுள்ளார்.

குழந்தைடா அவ
இதற்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிலளித்த சில்வியா, இதைப் பற்றி கேள்வி கேட்டால், பாடி ஷேமிங் ஆதரவாளர்கள் இந்த நபருக்கு ஆதரவளிப்பார்கள். எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. அது ஏன்? எப்போதும் ஒரு பெண் மற்றொரு பெண்ணை பற்றி தவறாக பேசுகிறாள்? கொழந்த டா அவ, .இப்போதே சமூகத்தின் அழுத்தம் தொடங்கியது. நமது எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











