»   »  கேன்ஸ் பட விழாவில் அறிமுகமாகும் சங்கமித்ரா... ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி!

கேன்ஸ் பட விழாவில் அறிமுகமாகும் சங்கமித்ரா... ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் வரலாற்றுப் படமான சங்கமித்ரா அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ருதிஹாஸன்.

Sangamithra at Cans

சுந்தர்.சி தனது அடுத்த படமான சங்கமித்ராவை பிரம்மாண்டமான முறையில் உருவாக்குகிறார். 8 ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையை விவரிக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா நாயகர்களாக நடிக்கின்றனர். வீரமும், தீரமும் நிறைந்த வீர மங்கையாக நாயகி ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

இந்த படத்தில் வாள்வீச்சில் வல்லமை கொண்ட வீரமங்கை பாத்திரத்தில் நடிப்பதற்காக லண்டனில் ஸ்ருதி ஹாசன் விஷேச பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

தேனாண்டாள் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படம் அதன் வரலாற்று கதைக் களத்திற்காக ஏற்கனவே கவனத்தை ஈர்த்துள்ளது.

Sangamithra at Cans

இந்நிலையில், வரும் 18 ம் தேதி நடைபெறும் சர்வதேச அளவில் புகழ் பெற்ற 70 வது கேன்ஸ் திரைப்பட விழாவின் துவக்க நாளில், சங்கமித்ரா திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் இயக்குநர் சுந்தர்.சி, நாயகர்கள் ஜெயம் ரவி, ஆர்யா, நாயகி ஸ்ருதி ஹாசன், தயாரிப்பாளர்கள் நாரயணன் ராம்சாமி, ஹேமா ருக்மணி, புரெடக்‌ஷன் டிசைனர் சாபு சிரில் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கேன்ஸ் திரைப்பட விழா மூலம் சங்கமித்ரா படத்தை சர்வதேச ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்வது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். படத்தின் கதை தேசிய மற்றும் சர்வதேச ரசிகர்களை ஈர்க்கக் கூடியது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், படத்தின் துவக்கத்தில் சர்வதேச ரசகர்களின் பங்கேற்பைப் பெறுவது உற்சாகமானது என்றும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்தார்.

English summary
Actress Shruthi Hassan has expressed her immense happiness over the launch of Sangamithra movie at Cans Film Festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil