»   »  சங்கமித்ராவைத் தள்ளிதான் வெச்சிருக்காங்களாம்...!

சங்கமித்ராவைத் தள்ளிதான் வெச்சிருக்காங்களாம்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சுந்தர் சி இயக்க தேனாண்டாள் தயாரிப்பில் பாகுபலி போல பிரம்மாண்ட சரித்திர படமாக உருவாக இருந்தது சங்கமித்ரா. விஜய், சூர்யா என்று போன ஹீரோ செலக்‌ஷன் கடைசியில் ஆர்யா, ஜெயம் ரவி என்று இறங்கியது.

ஹீரோயின்களாக பாலிவுட் ஹீரோயின்களைப் பேசிக்கொண்டிருப்பதாகவும் தகவல் வந்தது. ஆனால் சில நாட்களாக படமே ட்ராப் என்றும் செய்திகள் வந்தன.

இப்போது மீண்டும் ஹீரோயின் ஸ்ருதிஹாசன் என்று தகவல் வருகிறது.

Sundar C

அடடடடடா... என்னடா நடக்குது என்று சுந்தர் சி தரப்பிலே விசாரித்தோம். படம் ட்ராப் இல்லை. ஆனால் சுந்தர் சி அடுத்து ஒரு சின்ன படம் எடுக்கப்போகிறார். அதை எடுத்து ரிலீஸ் செய்த பிறகுதான் சங்கமித்ரா. சங்கமித்ரா வருடக்கணக்கில் இழுக்கும் புராஜக்ட். எனவே தான் பொறுமை காக்கிறார் என்கிறார்கள்.

அப்ப சுந்தர் சி டைப் கல்யாண மண்டப காமெடி படம் ஒண்ணு தயாராகப்போகுது... ரெடி ஆகுங்க மக்கழே!

English summary
Director Sundar C side has clarified that Sangamithra movie hasn't dropped, but just postponed.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil