»   »  மீண்டும் நடிக்க வந்தார் சங்கவி.. சமுத்திரக்கனிக்கு ஜோடி

மீண்டும் நடிக்க வந்தார் சங்கவி.. சமுத்திரக்கனிக்கு ஜோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சங்கவியை நினைவிருக்கிறதா... ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் சங்கவி.

சமுத்திரக்கனிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார் சங்கவி.

அஜீத்துடன்

அஜீத்துடன்

1993-ல் அமராவதி படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்தப் படம் சுமாராகப் போனாலும், அஜீத், சங்கவி இருவருக்குமே குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது.

விஜய் நாயகி

விஜய் நாயகி

பின்னர் விஜய் ரசிகர்களால் என்றைக்கும் மறக்க முடியாத நாயகியானார். ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ள, நிலாவே வா என கிட்டத்தட்ட அவரது ஆரம்ப கால படங்களின் ஆஸ்தான நாயகி.

ரஜினி - கமலுடன்

ரஜினி - கமலுடன்

தொன்னூறுகளில் தொடங்கி 2010 வரை தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ரஜினியுடன் பாபாவிலும், கமலுடன் பஞ்சதந்திரத்திலும் நடித்தார்.

சமுத்திரகனி

சமுத்திரகனி

கடந்த 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது, சமுத்திரகனிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ‘மூடர் கூடம்' படத்தை இயக்கிய நவீன் தற்போது ‘கொலஞ்சி' என்னும் படத்தை தயாரித்து வருகிறார். இதில் நாயகனாக ராஜாஜியும் நாயகியாக நைனா சர்வாரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சங்கவியும் நடிக்கிறார். இவர் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தை தனராஜ் சரவணன் இயக்குகிறார். நட்ராஜன் சங்கரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ராசிபுரத்தில் நடந்து வருகிறது.

English summary
Actress Sangavi is coming back to Kollywood after 5 years and playing against Samuthirakkani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil