»   »  நடிகை சங்கீதாவுக்கு மிரட்டல்

நடிகை சங்கீதாவுக்கு மிரட்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொலை வழக்கில் சிக்கி கைதாகி, தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி மதுரையில் தங்கியிருக்கும் புதுமுக நடிகை சங்கீதாவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதால் அவர் வக்கீல்கள் மற்றும் நண்பர்கள் பாதுகாப்புடன் தங்கியுள்ளார்.

புதுமுக இயக்குநர் செல்வா கொலை வழக்கில் சிக்கி கைதானவர் சங்கீதா. பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

அதன்படி மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்துப் போட்டு வருகிறார் சங்கீதா. ஒத்தக்கடை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் முதலில் தங்கியிருந்தார். ஆனால் அங்கு அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து ஹோட்டலைக் காலி செய்து விட்ட சங்கீதா, அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கினார். அங்கும் கொலை மிரட்டல் வந்துள்ளதாம். இதனால் அவரது வக்கீல்கள், நண்பர்கள் கூடவே தங்கியுள்ளனர்.

அவர்கள் புடை சூழ காவல் நிலையம் வந்து கையெழுத்துப் போட்டு விட்டுச் செல்கிறார் சங்கீதா.

தனது ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்யவுள்ளதாக அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.

உண்மையிலேயே கொலை மிரட்டல் வந்ததா அல்லது தினமும் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து தப்ப, டுபாக்கூர் விடுகிறாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil