»   »  2 குழந்தைகளின் தாயாக ரீ என்ட்ரி ஆகும் சங்கவி… விரைவில் மாங்கல்யம் தந்துனானே...!

2 குழந்தைகளின் தாயாக ரீ என்ட்ரி ஆகும் சங்கவி… விரைவில் மாங்கல்யம் தந்துனானே...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமுத்திரகனியின் மனைவியாக இரண்டு குழந்தைகளின் தாயாக கொளஞ்சி படம் மூலம் தமிழில் ரீ என்ட்ரி ஆகிறார் நடிகை சங்கவி. இதுவரைக்கும் எனக்கு திருமணம் நடக்கவில்லை. விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

90களில் தல அஜீத் ஜோடியாக அமராவதியில் அறிமுகமாகி தளபதி விஜய் ஜோடியாக கவர்ச்சியில் கலக்கியவர் நடிகை சங்கவி. தமிழ், கன்னடம் என 50 படங்கள் வரை ஹீரோயினாக நடித்த இவருக்கு ஒரு கட்டத்தில் மார்க்கெட் டல்லடிக்கவே 2005 ஆம் ஆண்டு ஆணை படத்திற்குப் பின் ஆள் காணாமல் போனார்.

டிவி சீரியலில்

டிவி சீரியலில்

சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும் சீரியல் மூலம் மீண்டும் ஒரு ரவுண்ட் வந்தார். சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களிலும் அவ்வப்போது எட்டிப்பார்த்தார் சங்கவி.

2 குழந்தைகளுக்கு அம்மா

2 குழந்தைகளுக்கு அம்மா

சில வருட இடைவெளிக்குப்பின் சங்கவி,மீண்டும் தமிழ் படத்தில் மறுபிரவேசம் செய்கிறார். 'கொளஞ்சி' என்ற படத்தில் அவர் சமுத்திரக்கனியின் மனைவியாக-2 குழந்தைகளுக்கு தாயாக நடிக்கிறார்!

குழந்தைகளின் உளவியல்

குழந்தைகளின் உளவியல்

ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருந்தாலும் ஒரு குழந்தைக்கு மட்டுமே அப்பாவிற்கு பாசம். மற்றொரு குழந்தையான கொளஞ்சியை அப்பா புறக்கணிக்கிறாராம். குழந்தைகளின் உளவியலை சொல்லும் இந்த படத்தை 'மூடர் கூடம்' நவீன் டைரக்டு செய்கிறார்!

வில்லியாக நடிப்பேன்

வில்லியாக நடிப்பேன்

இந்த படத்தில் நடிப்பது பற்றி கருத்து கூறியுள்ள சங்கவி, கொளஞ்சி எனக்கு ரீ என்ட்ரி தரும் படமாக இருக்கும் என்கிறார். இனி இதுபோன்ற வலுவான கதைகளை தேர்வு செய்து நடிக்க இருப்பதாகவும், வில்லியாகவும் நடிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார் சங்கவி.

திருமண அறிவிப்பு

திருமண அறிவிப்பு

என்னுடைய திருமணத்தைப் பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வந்துவிட்டன. இவை எதுவும் உண்மையில்லை. திருமண அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார் சங்கவி.

English summary
Actress Sanghavi who was quite famous for her role in Krishna Vamsi directed 'Sindhooram' movie ruled Southern film industry for a decade in 1993-2003 period. Now she is going to make a comeback with a Tamil movie to silver screen. She is making her comeback with a Tamil movie titled 'Kalonji'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil