»   »  சிறையிலிருந்து வெளியான 4 மணி நேரத்தில், 4 படங்களைக் கைப்பற்றிய சஞ்சய் தத்

சிறையிலிருந்து வெளியான 4 மணி நேரத்தில், 4 படங்களைக் கைப்பற்றிய சஞ்சய் தத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நேற்று சிறையிலிருந்து வெளியான 4 மணி நேரத்திற்குள் தனது அடுத்த பட வாய்ப்பைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் நடிகர் சஞ்சய் தத்.

நன்னடத்தை காரணமாக நேற்று புனேயில் உள்ள எரவாடா சிறையிலிருந்து, நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார். சஞ்சய் தத் விடுதலைக்கு பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

Sanjay Dutt Bagged 4 Movies

இந்நிலையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, சஞ்சய் தத் ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை உடனடியாகப் பெற்றிருக்கிறார்.

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன்களுடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, வருகின்ற கோடை விடுமுறையில் தொடங்கவுள்ளது.

இதில் சஞ்சய் தத்திற்கு ஜோடியாக முன்னணி ஹீரோயின் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

மேலும் சஞ்சய் தத் சோலோ ஹீரோவாக இப்படத்தில் நடிப்பதை இயக்குநர் சித்தார்த் உறுதி செய்திருக்கிறார்.

இப்படம் தவிர உமேஷ் சுக்லாவின் பெயரிடப்படாத படம், இந்திரா குமாரின் தம்மார் மற்றும் முன்னாபாய் படத்தின் 3 வது பாகம் ஆகியவற்றிலும் சஞ்சய் தத் நடிக்கவிருக்கிறார்.

English summary
Sanjay Dutt Released Prison for Yesterday, within few Hours he Bagged 4 Movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil