Don't Miss!
- News
தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரியை மாற்றணும்.. "என் இனிய தமிழ் மக்களே ஏன்?".. ரகசியம் உடைத்த பாரதிராஜா
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நடிகர் சஞ்சய் தத்துக்கு 3வது முறையாக பரோல் நீட்டிப்பு
மும்பை: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு 3வது முறையாக மீண்டும் ஒரு மாதம் பரோலில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக இந்தி நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து வெளியே வந்தார்.

இந்நிலையில், அவரது சிறை தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. எஞ்சிய மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனைக்காக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சரண் அடைந்த அவர் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு அக்டோபரில் மருத்துவ சிகிச்சைக்காக 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். அந்த பரோல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. பரோல் முடிவடைந்ததும் அவர் மீண்டும் சிறைக்கு திரும்பினார். இந்நிலையில் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதாவுக்கு இதயம் மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது.
தனது மனைவியின் சுகவீனத்தை கருத்தில் கொண்டு அவரை அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்பதற்காக தன்னை ஒரு மாதம் பரோலில் செல்ல அனுமதிக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். அவரது மனு ஏற்கப்பட்டு, கடந்த டிசம்பர் 21ஆம் தேதி பரோலில் வெளியே வந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தன் மனைவியை அவர் அருகில் இருந்து கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி 21ஆம் தேதியுடன் அவரது பரோல் முடிவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து மீண்டும் பரோல் நீட்டிப்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு பிப்ரவரி 21ஆம் தேதி வரை பரோல் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், மான்யதாவின் உடல்நிலையில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆகையால் தனக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க வேண்டும் என்று 3வது முறையாக புனே மண்டல கமிஷனரிடம் மனு செய்தார்.
அந்த மனுவின்பேரில், சஞ்சய் தத்திற்கு மீண்டும் ஒரு மாதம் அதாவது மார்ச் 21ம் தேதி வரை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.