»   »  எவனாச்சும் லீக் பண்ணா தொலைச்சிடுவேன் தொலைச்சு: பிரமாண்ட இயக்குனர் எச்சரிக்கை

எவனாச்சும் லீக் பண்ணா தொலைச்சிடுவேன் தொலைச்சு: பிரமாண்ட இயக்குனர் எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மறுபடியும் படத்தின் புகைப்படம் ஏதாவது கசிந்தால் அவ்வளவு தான் என்று பத்மாவதி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படக்குழுவை எச்சரித்துள்ளாராம்.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி பத்மாவதி என்ற வரலாற்று படத்தை இயக்கி வருகிறார். ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், தீபிகா படுகோனே, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே பன்சாலிக்கு அடுத்தடுத்து தலைவலியாக உள்ளது.

ரன்வீர்

ரன்வீர்

பத்மாவதி படத்தில் ரன்வீர் சிங் மன்னர் அலாவுத்தீன் கில்ஜியாக நடிக்கிறார். கில்ஜியின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியிடப்படும் என்று ரன்வீர் கடந்த 2ம் தேதி ட்வீட்டினார்.

லீக்

லீக்

அலாவுத்தீன் கில்ஜியின் ஃபர்ஸ்ட் லுக்கை பன்சாலி வெளியிடும் முன்பே அது கசிந்து சமூக வலைதளங்களில் தீயாக பரவிவிட்டது. இதை பார்த்த பன்சாலி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

பன்சாலி

பன்சாலி

இனியும் ஏதாவது போஸ்டர் கசிந்தால் நான் என்ன செய்வேன் என்று தெரியாது என படக்குழுவினரை கடுமையாக எச்சரித்துள்ளாராம் சஞ்சய் லீலா பன்சாலி.

தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்

பி.ஆர்.கள், மேக்கப் கலைஞர்கள், ஆர்ட் டைரக்டர்கள், ஸ்டைலிஸ்டுகள் என்று பன்சாலி தனது அனைத்து படங்களிலும் ஒரே குழுவுடன் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood director Sanjay Leela Bhansali has warned team Padmavati after Ranveer Singh's look in the movie got leaked.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil