»   »  கதை கேட்டது ஒரு குத்தமாய்யா?: ஹீரோவை மாற்றிய பிரபல இயக்குனர்

கதை கேட்டது ஒரு குத்தமாய்யா?: ஹீரோவை மாற்றிய பிரபல இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் ரன்வீர் சிங் திரைக்கதையை கேட்டதால் அவரை பத்மாவதி படத்தில் இருந்து நீக்கிவிட்டார் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ரன்வீர் சிங், தீபிகா படுகோனேவை வைத்து ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி ஆகிய இரண்டு ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்தார். இந்த தொடர் வெற்றிகளால் ரன்வீருக்கு மார்க்கெட் எகிறிவிட்டது.

இந்நிலையில் பன்சாலி தீபிகா, ரன்வீரை வைத்து பத்மாவதி படத்தை இயக்க தீர்மானித்தார்.

ரன்வீர்

ரன்வீர்

பத்மாவதி படத்தில் நடிக்க தீபிகா ரூ.12 கோடி சம்பளம் கேட்டு வாங்கியுள்ளார். படத்தில் ரன்வீர் சிங் தவிர ஷாஹித் கபூரையும் ஒப்பந்தம் செய்துள்ளார் பன்சாலி. ஷாஹித் பற்றி அறிந்ததும் ரன்வீருக்கு ஒரு டவுட் வந்துவிட்டது.

கதை

கதை

பன்சாலி சார் கொஞ்சம் கதையை சொன்னால் நன்றாக இருக்கும் என்று ரன்வீர் கேட்டுள்ளார். யாரை பார்த்து கதை கேட்கிறீர்கள், அப்படி ஒன்றும் உங்களுக்கு கதை சொல்லத் தேவை இல்லை என்று கோபத்தில் பொங்கிவிட்டாராம் பன்சாலி.

ரித்திக்

ரித்திக்

ரன்வீரை பத்மாவதி படத்தில் இருந்து நீக்கிய பன்சாலி அந்த கதாபாத்திரத்தில் ரித்திக் ரோஷனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். ஒரு ஹீரோ கதை கேட்டது குத்தமாய்யா என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கான் தனது ஆஸ்தான இயக்குனர்கள் கரண் ஜோஹர், ஆதித்யா சோப்ராவிடனும், சல்மான் கான் சூரஜ் பர்ஜாத்யாவிடமும் கதையா கேட்கிறார்கள். அப்படி இருக்கும்போது என்னிடம் எப்படி கதை கேட்கலாம் என்று ரன்வீர் மீது பன்சாலிக்கு கோபமாம்.

ஈகோ

ஈகோ

வேறு ஹீரோவை தேடினால் ரன்வீர் இறங்கி வருவார் என்று நினைக்கிறாராம் பன்சாலி. ரன்வீரோ என்னை வைத்து படம் எடுக்க முன்னணி இயக்குனர்கள் லைன் கட்டி நிற்கையில் நான் ஏன் உங்களிடம் வர வேண்டும் என்ற நினைப்பில் உள்ளாராம்.

English summary
Reportedly, Sanjay Leela Bhansali is very upset with Ranveer and is planning to sign Hrithik Roshan with Deepika Padukone for Padmavati.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil