என்னடா என் வேலைய இவன் பார்க்குறான்...அப்போ நான்...அபிஷேக்கை அலற விட்ட சஞ்சீவ்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக 53 நாட்களை எட்டி உள்ளது. நிகழ்ச்சி விறுவிறுப்பாக, தற்போது தான் சூடுபிடிக்க துவங்கி இருக்கிறது. எத்தனை ஷோக்கள் துவங்கப்பட்டாலும் பிக்பாஸ் ஷோவிற்கு இருக்கும் மவுசு மக்களிடம் குறையவில்லை என்பதை இந்த சீசன் மீண்டும் நிரூபித்துள்ளது.

Recommended Video

Preetha Sanjeev Lovely wishes to her Husband Sanjiv for Bigg Boss Entry | Bigg Boss Wildcard

பிக்பாசை தொகுத்து வழங்கி வரும் கமலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இதனால் இந்த வார இறுதி நிகழ்ச்சி மற்றும் கமல் சிகிச்சை முடிந்து வரும் வரைக்கும் பிக்பாசை யார் தொகுத்து வழங்க போகிறார் என்ற பேச்சு சீரியசாக ஓடிக் கொண்டிருக்கிறது.

3 வைல்ட்கார்டு என்ட்ரி

3 வைல்ட்கார்டு என்ட்ரி

இதற்கிடையில் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் 47 வது நாளில் முதல் வைல்ட்கார்ட் என்ட்ரியாக அபிஷேக் ராஜாவும், 50 வது நாளில் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக டான்ஸ் மாஸ்டர் அமீரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரியாக சின்னத்திரை பிரபலம் சஞ்சீவ் சென்றுள்ளார்.

புதிய டாஸ்க்

புதிய டாஸ்க்

நிகழ்ச்சி படி 52 வது நாள் இரவில் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். 53 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் ப்ரோமோவில், புதிய டாஸ்க் பற்றிய அறிவிப்பை அண்ணாச்சி வாசிக்கிறார். அப்போது என்ன நடந்தாலும் யாரும் எந்த ரியாக்ட்டும் பண்ண கூடாது என்கிறார் பிக்பாஸ்.

சஞ்சீவ் மாஸ் என்ட்ரி

சஞ்சீவ் மாஸ் என்ட்ரி

இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டது. அதில், வீட்டிற்கு கொரோனா கவச உடை அணிந்த சிலர் வீட்டிற்குள் வருகிறார்கள். லைட்கள் அணைகின்றன. ஆனாலும் ஹவுஸ்மெட்கள் பெட்ரூம் ஏரியாவில் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வீட்டிற்குள் சஞ்சீவ் என்ட்ரி கொடுக்கிறார். போட்டியாளர்கள் அவரிடம் போய் விஜய் இந்த ஷோ பார்க்கிறாரா என கேட்கிறார்கள்.

ரெவ்யூ கொடுக்கும் சஞ்சீவ்

ரெவ்யூ கொடுக்கும் சஞ்சீவ்

இந்நிலையில் மூன்றாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் டைனிங் டேபிளில் அமர்ந்து, அனைவரை பற்றியும் ரெவ்யூ கொடுக்கிறார் சஞ்சீவ். முதல் வாரத்தில் அமைதியாக இருந்த வருண், தற்போது ஹீரோவாக ஜொலிக்கிறார். அக்ஷரா, புரியாத புதிராகவே இருந்து வருகிறார் என்கிறார். ராஜு, சூடு வைத்தால் ஓடும் மீட்டர் போல. இன்னும் சூடாகவில்லை என்கிறார். பிரியங்கா அப்படியே என்னை மாதிரி. கொஞ்சினா கொஞ்சுறது. மிஞ்சினா மிஞ்சுறது என்கிறார். அனைவரும் டேபிளில் அமர்ந்திருக்க அபிஷேக் மட்டும் ஓரமாக நின்று பீதி கலந்த முகத்துடன் நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

என் வேலைய இவன் பார்க்குறான்

என் வேலைய இவன் பார்க்குறான்

வழக்கமாக வீட்டில் இருப்பவர்கள் பற்றி அபிஷேக் தான் ரெவ்யூ கொடுப்பார். வந்த இரண்டாவது நாளே ரெவ்யூ கொடுத்தார். பிறகு கமலும் கூட இதுவரை இரண்டு முறை அபிஷேக்கிடம் ரெவ்யூ கேட்டு விட்டார். ஆனால் 21 நாட்கள் வீட்டில் இருந்து விட்டு, வெளியேறி, 47 வது நாளில் ரீஎன்ட்ரி கொடுத்த அபிஷேக் இதுவரை மற்றவர்கள் பற்றி, அவர்களின் கேமில் முன்னேற்றம் உள்ளதா, இல்லையா என எதுவும் சொல்லவில்லை.

ஷாக்கான அபிஷேக்

ஷாக்கான அபிஷேக்

ஆனால் வீட்டிற்குள் வந்த சிறிது நேரத்திலேயே சஞ்சீவ் அனைவரை பற்றியும் ரெவ்யூ கொடுப்பதை பார்த்து மிரண்டு போய் விட்டார் அபிஷேக். அதுவும் முதல் வாரத்தில் எப்படி இருந்தீர்கள், இப்போ எப்படி இருக்கிறீர்கள் என சஞ்சீவ் சொல்வதை பார்த்து ஷாக்காகி போய் உள்ளார்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்

கலாய்க்கும் நெட்டிசன்கள்

இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள், சஞ்சீவ் என்ட்ரி வேற லெவல். ஆனால் அமீர்னு ஒரு ஆள் வந்தாரே அவரை ஆளவே காணோம். தளபதி விஜய் பெயரை பயன்படுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும். அபிஷேக் மைண்ட் வாய்ஸ்...அண்ணே அப்டியே நம்மள பற்றி...சஞ்சீவ் : தள்ளி நில்லுடா. ஓவரா கத்தி, இந்த வாரம் ஓவராக பண்ணிகிட்டு இருக்காரே அக்ஷரா. அப்போ இந்த வாரம் வெளியே போக போறது இவர் தானா என பலர் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X