»   »  பிச்சைகாரனில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக அறிமுகமாகும் சாதனா டைடஸ்!

பிச்சைகாரனில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக அறிமுகமாகும் சாதனா டைடஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அன்றும், இன்றும் என்றும் தமிழ் திரை கதா நாயகிகள் கேரளாவில் இருந்துதான் அதிகம் வருகின்றனர். பழக்கமான முகமும், எளிதாக புரிந்துக் கொள்ளும் தன்மையும் அவர்களை தமிழ் திரை உலகின் உச்சத்தில் உட்கார வைக்கிறது.

அந்த வரிசையில் விஜய் ஆண்டனி நடிப்பில், 'பூ', டிஷும்' ஆகிய படங்களை இயக்கிய சசி இயக்கத்தில் வெளி வர இருக்கும் 'பிச்சைகாரன்' படத்தில் கதாநாயகியாக வரும் புதுமுகம் சாதனா டைடஸ் இடம் பிடிக்கிறார்.


பயம்

பயம்

'இதுவரை என்னைத் தவிர சினிமாவில் என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் நடித்ததில்லை. ஒரு சில விளம்பரங்களில் விளையாட்டாக நடித்துள்ளேன். ஆனால் நான் சினிமாவுக்கு வரப் போகிறேன் என்றதும் என் குடும்பத்தில் பெரும் களேபரமே நடந்து விட்டது. நான் என் முடிவில் தீவிரமாக இருப்பதை பார்த்த என் பெற்றோர்கள் போனால் போகட்டும் என்றே நடிக்க விட்டார்கள். விளம்பரங்களுக்காக கேமரா முன்பு நான் நடித்து இருந்தாலும், சினிமா படப்பிடிப்பில் கேமரா முன் நிற்க முடியவில்லை. பயத்தில் கை கால் நடுங்க ஆரம்பித்து விட்டது.


கதாநாயகிக்கு முக்கியத்துவம்

கதாநாயகிக்கு முக்கியத்துவம்

ஒரு நடிகையாக பின்நாளில் வர உள்ள புகழும், பெயரும் தான் இந்த அச்சத்தை தருகிறது என்று நினைக்கிறேன். ஆயினும் படப்பிடிப்பில் பயமின்றி நடிக்க எனக்கு தைரியம் கொடுத்த இயக்குநர் சசிக்கும், விஜய் ஆண்டனிக்கும் நன்றி. இயக்குநர் சசி படத்தில் நடிப்பதற்கு நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். அவரது படங்களில் கதாநாயகிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அப்படி இருக்கும்.


நம்பிக்கை

நம்பிக்கை

தமிழ் திரை உலகில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க பட்ட பூ மாரி,படையப்பா நீலாம்பரி,அலை பாயுதே சக்தி, கஜினி கல்பனா , என்று நீங்கா இடம் பெரும் கதாபாத்திரங்கள் கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை. சசி சாரின் இயக்கத்தில் நடித்தால் அப்பேற்பட்ட பாத்திரங்கள் கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.


விஜய் ஆன்டனி அசுர வேகம்

விஜய் ஆன்டனி அசுர வேகம்

விஜய் ஆண்டனி வெளித் தோற்றத்தில் மிகவும் மென்மையாக இருப்பவர். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவரது வேகத்தில் ஒரு அசுர பலம் தெரியும். சினிமா, சினிமா, என்றே எந்த நேரமும் அதே கவனத்தில் இருப்பார். தொடர்ந்து மூன்றுப் படங்கள் ஹிட் கொடுத்து இருப்பதின் சூட்சுமம் இதுதான் என்று நினைக்கிறேன்.


வெற்றி

வெற்றி

நான் பார்த்த வரையில் பிச்சைகாரன் படமும் அவரது வெற்றி பட்டியலில் நிச்சயம் சேரும். எனக்கு வாய்பளித்த, என் கனவை நனவாக்கிய விஜய் ஆண்டனி கார்ப்பொரேஷன் நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றி," என்றார் சாதனா.


English summary
Santa Titus, a former ad girl from Kerala is making her debut in Vijay Antony's Pichaikkaran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil