சந்தானம் – புகழ் இணையும் பட ரிலீஸ்...தியேட்டரிலா? ஓடிடி.,யிலா?
சென்னை : நடிகர் சந்தானம் கடைசியாக நடித்த பாரீஸ் ஜெயராஜ் படம் சமீபத்தில் தான் ரிலீஸ் செய்யப்பட்டது. ஜான்சன் கே இயக்கிய இப்படம் பல விதமான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் பல்வேறு சுவாரஸ்யமான தலைப்பிலான படங்களில் தற்போது நடித்து வருகிறார். சபாபதி, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது வெளியிடப்படும் இந்த படங்கள் பற்றிய அறிவிப்புக்கள் சந்தானம் படங்களின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

இதற்கிடையில் ஏற்கனவே சந்தானம் நடித்து முடித்துள்ள சர்வர் சுந்தரம், டிக்கிலோனா போன்ற படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இந்த நிலையில் அவர் நடித்து வரும் சபாபதி படத்தின் ஃபஸ்ட்லுக் சந்தானத்தின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது.
சந்தானத்தின் பிறந்தநாள் ட்ரீட்டாக ரசிகர்களை குஷிப்படுத்த இந்த ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. டைரக்டர் ஆர்.ஸ்ரீநிவாச ராவ் இயக்கும் இந்த படத்தில், குக் வித் கோமாளி புகழ் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
ஏறக்குறைய முடிவடையும் நிலையில் இருக்கும் இந்த படத்தை நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜுலை மாதம் சோனிலைவில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











