Don't Miss!
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Technology
Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா? போட்டோ கூட ரிட்டன் வருமா?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
வடையை நழுவவிட்ட சந்தானம்..“குலு குலு“ படத்தின் வேற மாறி டீசர் !
சென்னை : நடிகர் சந்தானத்தின் நடிப்பில் வெளியாக உள்ள குலுகுலு திரைப்படத்தின் டீசரை படக்குழு சற்று முன் வெளியிட்டுள்ளது.
மேயாதமான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் குலு குலு. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
அடிதுள்..ரிலீசுக்கு
முன்பே
3
சர்வேதச
விருதுகளை
அள்ளிய
பார்த்திபனின்
இரவின்
நிழல்
மேலும், பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, லொள்ளு சபா மாறன், டி எஸ் ஆர், பிபின், கவி, ஹரிஷ், யுவராஜ், மாரிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நடிகர் சந்தானம்
தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா நடிகராக முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "லொள்ளு சபா" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சபாபதி வெற்றிப்பெறவில்லை
காமெடி நடிகராக நடித்த சந்தானம் கடந்த சில வாருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஜொலித்து வருகிறார். சந்தானம் இறுதியாக சபாபதி படத்தில் நடித்து இருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சபாபதி திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இந்த படத்திற்கு முன்பாக சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

குலுகுலு டீசர்
சந்தானம் நடிக்கும் குலுகுலு திரைப்படத்தின் டீசர் வெளியாகிறது. அந்த டீசரில் சகலகலா வித்தை தெறிந்தவன்...பொருளை கைமாற்றுவதில் வித்தகன் என்று சந்தானத்தை புகழ...ஒரு வடையை கைமாற்ற முடியாமல் கைநழுவவிடுகிறார் சந்தானம்...காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் வெளியாகி உள்ள டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டீசரே இப்படினா படம் எப்படி இருக்கும் என ரசிகருக்கு படத்தின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.

ஜூலை 29ந் தேதி
ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட குலுகுலு திரைப்படம் ஜூலை 29ந் தேதி வெளியாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இப்படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.