லெஜண்ட் அண்ணாச்சி உடன் மோதப் போகும் சந்தானம்.. குலுகுலு ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: மாஸ்டர், விக்ரம் என எங்க கூடத்தான்னே வொர்க் பண்ணிட்டு இருந்த எப்படி திடீர்னு ஒரு படத்தை எடுத்து அதுக்குள்ள ரிலீஸ் பண்ணப் போற என்கிற கேள்வியை லோகேஷ் கனகராஜின் மொத்த டீமுமே இயக்குநர் ரத்னகுமாரிடம் எழுப்பி வருகின்றனர்.

சந்தானம் நடிப்பில் ரத்னகுமார் இயக்கி உள்ள குலுகுலு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதுவும் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி உடனே மோதப் போவது தான் இதில் ஹைலைட்.

மேயாத மான்

மேயாத மான்

வைபவ், பிரியா பவானி சங்கர், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் காதல், காமெடி, தங்கச்சி சென்டிமென்ட், எங்க வீட்டுக் குத்து விளக்கே கானா சாங் கலந்து செம கலக்கலாக ஒரு படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். முதல் படமே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில், அடுத்த படத்தை இன்னமும் தரமாக செய்ய வேண்டும் என தரமான சம்பவத்தையே செய்து விட்டார்.

படு போல்டான ‘ஆடை'

படு போல்டான ‘ஆடை'

அமலா பாலுக்கு காமினின்னு பெயர் வைத்து படத்துக்கு ஆடை என டைட்டில் வைத்த ரத்னகுமார் தான் எவ்வளவு பெரிய குசும்பு பிடித்தவர் என்பதை அந்த படத்தின் மூலம் அமலா பாலுக்கு ஒட்டுத் துணிக் கூட கொடுக்காமல் பாதி படத்தில் நடிக்க வைத்து ஒட்டுமொத்த சினிமாவையும் அலற விட்டார். ஆடை படத்தில் நடித்த அமலா பாலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று பார்த்தால், தமிழ் சினிமாவை விட்டே அவரை பிளாக் லிஸ்ட் செய்தது போல பட வாய்ப்புகளே பறி போனது.

லோகேஷ் கனகராஜ் உடன் ஐக்கியம்

லோகேஷ் கனகராஜ் உடன் ஐக்கியம்

உடனடியாக பெரிய படத்தை இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ரத்னகுமார், மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் டீமில் ஐக்கியமாகி விட்டார். அவரது வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. பெரிய ஹீரோக்களை வைத்து அடுத்து படம் இயக்குவார் ரத்னகுமார் என எதிர்பார்த்த நிலையில், அவருக்கு வாய்ப்பு கொடுத்தது நடிகர் சந்தானம் தான். சந்தானத்தை வைத்து ஜாலியான சம்பவத்தை அதிரடியாக எடுத்து முடித்திருக்கிறார் ரத்னகுமார்.

குலு குலு ரிலீஸ் தேதி

குலு குலு ரிலீஸ் தேதி

சமீபத்தில் தான் லாரி உடன் நடிகர் சந்தானம் உலக உருண்டை எல்லாம் பார்த்தப்படி குலு குலு படத்தை ஆரம்பிப்பதாக ஒரு அறிவிப்பு வெளியானது. படம் தொடர்பான வேறு எந்தவொரு அப்டேட்டும் கொடுக்காத நம்ம அப்டேட் கிங் திடீரென 'தலை கீழாகத்தான் குதிக்கப் போகிறோம்' என கேப்ஷன் கொடுத்து குலு குலு படத்தின் ரிலீஸ் இந்த மாதம் ஜூலை 29 என அறிவித்துள்ளார்.

லெஜண்ட் உடன் மோதல்

லெஜண்ட் உடன் மோதல்

ஒட்டுமொத்த திரையரங்கிலும் என் படம் தான் ரிலீஸ் ஆக வேண்டும் என 200 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா ரிலீசாக தனது தி லெஜண்ட் படத்தை உருவாக்கி ஜூலை 28ம் தேதி வெளிவர காத்துக் கொண்டிருக்கும் வேங்கையுடனே போட்டிப் போட சந்தானம் முடிவு செய்து விட்டாரே? என ரசிகர்கள் ஆச்சர்யமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே வெளியான யானை உள்ளிட்ட பல படங்கள் நின்னு பேசி வரும் நிலையில், குலு குலுவும் வெளியானால், தி லெஜண்ட் படத்துக்கு 400 தியேட்டர்கள் கூட கிடைக்காத நிலை உருவாகி விடும் சூழல் இருப்பதாக கூறுகின்றனர். வசூல் வேட்டை நடத்தப் போறது சந்தானமா? அண்ணாச்சியான்னு இந்த மாத இறுதியில் தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X