சந்தானத்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா.. கசிந்தது தகவல்?

சென்னை : நடிகர் சந்தானம் இப்பொழுது அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா என்ற படத்தில் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

A1 வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிபெற்றது.

டிக்கிலோனா, சபாபதி, மன்னவன் வந்தானடி போன்ற படங்களில் நடித்து வரும் சந்தானம் அடுத்து பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

வசூல் சாதனை

வசூல் சாதனை

சந்தானத்தின் காமெடிக்கென்றே இன்றுவரை பல கோடி ரசிகர்கள் இருக்கையில் இப்பொழுது படங்களில் கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார். ஹீரோவாக ஆன பிறகு காமெடி ரோலில் நடிப்பதை தவிர்த்து விட்டா சந்தானம் பல ஹிட் படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். அவை அனைத்தும் வசூல் சாதனையையும் செய்து வருகிறது.

பாரிஸ் ஜெயராஜ்

பாரிஸ் ஜெயராஜ்

இந்த வகையில் ஜான்சன் இயக்கியிருந்த ஏ1 வெற்றி பெற அதைத் தொடர்ந்து மீண்டும் சந்தானம் ஜான்சன் கூட்டணியில் பாரிஸ் ஜெயராஜ் சில மாதங்களுக்குப் முன் வெளியாகி பட்டையை கிளப்பியது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

Recommended Video

Paris Jeyaraj pressmeet | Santhanam, Santhosh Narayanan
மூன்று வேடங்களில்

மூன்று வேடங்களில்

சர்வர் சுந்தரம்,மன்னர் வந்தானடி திரைப்படங்கள் சந்தானம் நடிப்பில் வெளியாக தாமதமாகி கொண்டிருக்கையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா என்ற படத்தில் சந்தானம் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் வித்தியாசமான டீஸர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சபாபதி என்ற படத்திலும் சந்தானம் நடித்து வருகிறார்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இவ்வாறு தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானம் அடுத்து மேயாத மான்,ஆடை உள்ளிட்ட படங்களை இயக்கிய ரத்ன குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. ரத்னகுமார் விஜய்யின் மாஸ்டர் படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியிருந்தார். முதல் முறையாக ரத்னகுமார் சந்தானம் கூட்டணி இணைய இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X