twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாலிப ராஜா... 'சைக்ரியாட்டிஸ்ட்' சந்தானம்!

    By Shankar
    |

    வியாபார ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்ற படம் "கண்ணா லட்டு திண்ண ஆசையா". அதே நட்சத்திர கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்து உருவாகி வரும் படம் "வாலிப ராஜா".

    "க.ல.தி.ஆ" நாயகன் சேது, சந்தானம், விஷாகா இதில் நடிக்கிறார்கள். இன்னொரு நாயகியாக பாலிவுட் நடிகை நுஷ்ரத் நடிக்கிறார்.

    சாய் கோகுல் ராம்நாத்

    சாய் கோகுல் ராம்நாத்

    ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, தேவதர்ஷினி, விடிவிகணேஷ், நீலிமா, மீரா கிருஷ்ணன், சித்ராலட்சுமணன், கனல் கண்ணன், சந்தான பாரதி, பஞ்சு சுப்பு என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உள்ளது.

    கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாய் கோகுல் ராம்நாத். இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தவர்.

    மனநல மருத்துவர் சந்தானம்

    மனநல மருத்துவர் சந்தானம்

    சேது டிசைனராக வருகிறார். சந்தானம் மன நல மருத்துவர். விஷாகா மனநல மருத்துவம் படிக்கும் மாணவி.

    "வாலிப ராஜா" என்பது படத்தில் சந்தானத்தின் பெயர்தான். சைக்ரியாட்டிஸ்ட் என்பதால் அப்படி பெயராம். சந்தானம் இத்துறையில் சென்னையில் பிரபலமானவர். கதை பயணத்தில் அவர் முக்கிய பயணியாக இருப்பதால் அந்த பாத்திரப் பெயரையே தலைப்பாக்கிவிட்டார்களாம்.

    கிளு கிளு சமாச்சாரமெல்லாம் இல்ல...

    கிளு கிளு சமாச்சாரமெல்லாம் இல்ல...

    "வாலிப ராஜா" என்கிற பெயரை வைத்து இது வாலிபம், கிளுகிளுப்பு சார்ந்த கதை என்று யாரும் யூகம் செய்து விட வேண்டாம்," என்று எச்சரிக்கையாகக் குறிப்பிடும் சாய் கோகுல் ராம்நாத், "இது ஒரு முழு நீளகுடும்பச் சித்திரம். அதாவது ஃபேமிலி என்டர்டெயினர்" என்கிறார் அழுத்தமாக.

    குடும்பத்துடன் வந்து பார்க்கும் படியான கலகலப்பான படமாக இருக்கும் என்று உத்திரவாதம் தருகிறார்.

    நகரம் சார்ந்த கதை

    நகரம் சார்ந்த கதை

    நகரம் சார்ந்த கதை இது. சென்னை, பாண்டிச்சேரியில் இதுவரை 26 நாட்களில் பாதிப் படத்தை முடித்து இருக்கிறார். மீதி படத்துக்கு மதுரை, குற்றாலம் செல்ல திட்டமிட்டுள்ளனர். "கண்ணா லட்டு திண்ண ஆசையா" வெற்றிக் கூட்டணியை வைத்து அடுத்து ஒரு படம் செய்யலாம் என்ற எண்ணத்தில் உருவானதே "வாலிப ராஜா" படக்குழு.

    திரைக்கதையில் இயக்குநர் சாய் கோகுல் ராம்நாத்துடன், கணேஷ்ராஜ் இணைந்துள்ளார்.

    தெலுங்கு இசையமைப்பாளர்

    தெலுங்கு இசையமைப்பாளர்

    ஒளிப்பதிவு- லோகநாதன். இவர் தெலுங்கில் 5 படங்களிலும் 8 மலையாளத்தில் படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவரது ஒளிப்பதிவில் மலையாளத்தில் வந்த "உஸ்தாத் ஓட்டல்" பல விருதுகளை குவித்த படம்.

    இசை-ரதன். இவர் "அந்தால ராட்சசி" போன்று தெலுங்கில் 3 வெற்றிப் படங்களில் இசையமைத்தவர்.

    படத்தொகுப்பு - சத்யராஜ். இது குடும்பச் சித்திரம் என்றாலும் சிக்கனம் பார்க்காமல் தாராளமாக செலவழித்துள்ளார்களாம். தயாரிப்பு - வாங்ஸ் விஷன் ஒன்

    English summary
    After KLTA, Santhanam plays lead role in debutant Sai Gokul directed Vaaliba Raja.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X