Don't Miss!
- Sports
இவரை நியாபகம் இருக்கா? தோனியின் மானத்தை காப்பாற்றிய ஜோகிந்தர் சர்மா.. ஓய்வு முடிவை அறிவித்தார்
- News
அடுத்த மூவ் என்ன? ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பரபர ஆலோசனை
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பொறாமை பிடித்த நடிகர்கள்.. வஞ்சம் தீர்க்கும் வசனங்கள்.. இதுதான் இன்றைய தமிழ் சினிமா!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டும், மறைமுகமாக வசை பாடிக் கொண்டும் வசனம் வைப்பது புதிய டிரெண்டாக மாறியுள்ளது.
முன்பெல்லாம் இப்படி ஒருவரை ஒருவர் திரையில் திட்டிக் கொள்ள மாட்டார்கள் நடிகர்கள். குறிப்பாக எம்.ஜி.ஆர். - சிவாஜி காலத்திலும் சரி, பின்னர் கமல்ஹாசன் - ரஜினி காலத்திலும் கூட சரி, இப்படியெல்லாம் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது போல வசனம் வந்ததாக நினைவில்லை.
ஆனால் இந்த விஜய் - அஜீத் காலத்தில்தான் இது சற்று ஆரம்பித்தது என்று சொல்லலாம். அதிலும், அஜீத்தைப் போல திரையில் வறுபட்ட நடிகர் வேறு யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அஜீத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் விஜய்யின் சில படங்களில் வறுத்தெடுத்திருப்பார்கள்.
அது பெரும் சர்ச்சையாகவும் மாறியது. பின்னர்தான் விஜய் படங்களில் இந்த மாதிரியான வசனங்கள் நின்றன.

தனுஷ் - சிம்பு அக்கப்போர்
பின்னர் இந்த சண்டையை தனுஷ், சிம்பு கையில் எடுத்துக் கொண்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் மறைமுகமாக வசை பாடி வசனம் வைக்க ஆரம்பித்தனர்.

இவர்களும் இப்போது நண்பேண்டாவாம்...
இது கொஞ்ச காலத்துக்கு ஓடியது. சமீபத்தில்தான் இருவரும் நாங்கள் நண்பேண்டா என்று பறை சாட்டிக் கொண்டு வசன வசவுகளை நிறுத்தினர்.

இப்ப இவங்க ரவுண்டு போல
இந்த நிலையில் லேட்டஸ்டாக இரண்டு காமெடியன்களிடையே சண்டை மூண்டுள்ளதாம்.

பரோட்டாவும், சந்தானமும்
அதாவது பரோட்டா சூரிக்கும், சந்தானத்திற்கும் இடையே வசன மோதல் மூண்டுள்ளதாக கூறுகிறார்கள்.

"வீச்சு" பரோட்டா.. டென்ஷன் சந்தானம்!
சந்தானத்தின் காமெடி இடத்தை ஆட்டிப் பார்க்கும் வகையில் பரோட்டா சூரியின் வளர்ச்சி படு வேகமாக உள்ளதாம். பல படங்கள் அவரை நோக்கிப் பாய்ந்து வருகிறதாம். சந்தானத்தின் "வாய்"தான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.

நானும் இப்ப ஹீரோ
மேலும் சந்தானமும் இனிமேல் நடித்தால் ஹீரோதான் என்று திட்டவட்டமாக கூறி வருவதால் அவருக்கான படங்கள் குறைந்து அவருக்குப் பதில் சூரியை நோக்கிப் போக ஆரம்பித்துள்ளது.

அவரை மனதில் வைத்து வசனமா
இந்த நிலையில் ரொம்ப காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டு, அதில் சந்தானம் வெறும் காமெடியனாக மட்டும் நடித்திருந்த அரண்மனை படம் தற்போது ரிலீஸாகியுள்ளது (திருட்டு விசிடியில் - இணையத்தில், இந்தப் படம் பளிச்சென ஏற்கனவே பெரிய ரவுண்டு அடித்துக் கொண்டுள்ளது). அந்தப் படத்தில் வரும் வசனம் சூரியை கிண்டலடிக்கும் வகையில் சந்தானத்திற்காக வைத்துள்ளதாக பேசிக் கொள்கிறார்கள்.

இவனெல்லாம் காம்படிஷனா...
அந்தப் படத்தில் இவனெல்லாம் எனக்கு காம்படிஷேனே இல்லை என்று சந்தானம் ஒரு வசனம் பேசுகிறாராம். அது சூரியை மனதில் வைத்துத்தான் பேசியுள்ளதாக கொளுத்திப் போட்டுள்ளனர் சிலர்.
இவங்களே அடிச்சுக்குவாங்க.. இவங்களே சேந்துக்குவாங்க.. !