கடைசியில் இப்படி ஆயிடுச்சே.... சந்தானத்தின் அந்த படமும் ஒடிடியில் ரிலீசா!
சென்னை : நடிகர் சந்தானம் நடித்த டிக்கிலோனா நேரடியாக ஓ.டி.டியில் வெளியிட தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் யோகிபாபு, ஹர்பஜன் சிங் , ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த், அனகா, ஷிரின், ஷாரா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

மைமிங் காமெடி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லோள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த சந்தானம். டைமிங் காமெடியில் கலக்கி,சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்தார். சந்தானம் வரும் ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
காமெடி நடிகராக இருந்த சந்தானம் முதல் முதலாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த திரைப்படத்திலும் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. இதனால் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. இதையடுத்து, கண்ணா லட்டு திண்ண ஆசையா உள்ளிட்ட திரைப்படங்களில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

தில்லுக்கு துட்டு
சந்தானம் தில்லுக்கு துட்டு திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ஒரு பேய் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும். இப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வறவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து, தில்லுக்கு துட்டு 2 வெளியானதுஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பிஸ்கோத், டகால்டி, ஏ1, பாரிஸ் ஜெயராஜ் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

டைம் டிராவல்
சந்தானம் 3 கெட்டப்பில் நடிக்கும் டைம் டிராவல் நகைச்சுவை திரைப்படம் தான் டிக்கிலோனா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில் 2027ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டுக்கு வந்து தனது கல்யாணத்தை தடுத்து நிறுத்துவதற்காக சந்தானம் டைம் டிராவல் செய்வதாக கூறப்படுகிறது.

சந்தானம் 3 கெட்டப்
டிக்கிலோனா டிரைலரில் சந்தானம் மூன்று விதமான தோற்றத்தில் வருகிறார். ஆனால் அவை உண்மையில் 3 கெட்டப்பா அல்லது ஒரே ஆள் 3 காலங்களில் டைம் டிராவலால் மாறுகிறாரா என்பது தெரியவில்லை.

யுவன் சங்கர் ராஜா
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இப்படத்தின் பாடல்கள் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video

டிக்கிலோனா ஓடிடி?
டிக்கிலோனா திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட முடியாத சூழ்நிலை உள்ளதால், இப்படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியிட தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, டிக்கிலோனா திரைப்படம் ஜீ-5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











