»   »  சந்தானத்துக்கு மட்டும் 'அந்த' ஆசை இருக்காதா என்ன?

சந்தானத்துக்கு மட்டும் 'அந்த' ஆசை இருக்காதா என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேற ஒண்ணும் இல்ல... ஆக்ஷன் ஹீரோ அவதாரமெடுத்தால் முதலில் போட வேண்டியது போலீஸ் கெட்டப். ஹீரோவாக ஜெயித்து, அடுத்து ஆக்ஷன் அவதாரம் எடுத்துவிட்டார் காமெடியனாக இருந்த சந்தானம்... ஸோ... அவருக்கும் அந்த ஆசை.. அதாங்க போலீஸ் கெட்டப் ஆசை வந்துவிட்டது.

இதோ.. மணிகண்டன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் அவர் முதல் முறையாக போலீஸ் கெட்டப் போடுகிறார்.

Santhanam's first action movie Odi Odi Uzhaiikanum

வாசன் பிரதர்ஸ் - சிவஸ்ரீ பிக்சர்ஸ் - வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் 60 ஆண்டுகளாக படத் தயாரிப்பில் இருக்கும் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் தயாரிக்கும் புதிய படம் இது.

படத்துக்கு தலைப்பு ஓடி ஓடி உழைக்கணும்!

நாயகியாக அமோரா லிஸிர் நடிக்கிறார். ரோபோ சங்கர், நான்கடவுள் ராஜேந்திரன், யோகிபாபு, மயில்சாமி, கோவைசரளா என காமெடிப் பட்டாளமே களமிறங்குகிறது சந்தானத்துடன்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் இயக்கிய கேஎஸ் மணிகண்டன்.

Santhanam's first action movie Odi Odi Uzhaiikanum

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், "முழுக்க முழுக்க நகைச்சுவை படம் இது. இதுவரை சில படங்களில் சந்தானம் ஒரு சில காட்சிகளில் போலீஸ் வேடத்தில் சந்தானம் நடித்திருப்பார். ஆனால் போலீஸ் வேடத்தில் நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறை. மற்றும் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் நடிக்கிறார்கள். கண்ணா லட்டு தின்ன ஆசையா எப்படி அனைவரும் பார்த்து ரசிக்கும் படமாக இருந்ததோ அதே போல் இந்த படமும் மக்களுக்கு பிடித்த காமெடி கலக்கல், அதிரடி ஆக்ஷன் படமாகவும் இருக்கும். மக்கள் திலகம் எம்ஜி.ஆர் அவர்களின் ஹிட் பாடலான 'ஓடி ஓடி உழைக்கனும்' என்ற தலைப்பை எங்கள் படத்திற்கு வைப்பது எங்களுக்கு பெருமை," என்றார்.

English summary
For the first time Santhanam is wearing police uniform for KS Manikandan's action comedy Odi Odi Uzhaikkanum.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil