»   »  எடுத்த படங்களே இன்னும் வரல... அதுக்குள்ள அடுத்த படத்துக்கு தாவும் சந்தானம்!

எடுத்த படங்களே இன்னும் வரல... அதுக்குள்ள அடுத்த படத்துக்கு தாவும் சந்தானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் சந்தானம் முன்னணி காமெடியன்களில் ஒருவராக இருந்து தற்போது கதாநாயகனாக நடிப்பதை முதன்மையாக வைத்துக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இந்தக் கால இளைஞர்களை தன் பக்கம் அதிகமாக ஈர்த்த நகைச்சுவை நடிகர்களில் சந்தானம் முதன்மையானவர். ஆனால், அவருக்கும் சின்னத்திரையில் இருந்து ஹீரோவான சிவகார்த்திகேயனைப் பார்த்து ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வந்தது.

சந்தானம் கதாநாயகனாக நடித்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித்தான்' ஆகிய இரண்டுமே தோல்விப் படங்களாக அமைந்தது. 'தில்லுக்கு துட்டு' மட்டுமே ஓரளவுக்கு அவரைக் காப்பாற்றியது.

தொடர்ச்சியாகப் படங்கள்

தொடர்ச்சியாகப் படங்கள்

'தில்லுக்கு துட்டு' படத்திற்குப் பின் சந்தானம் நாயகனாக நடிக்க ஆரம்பித்த 'சர்வர் சுந்தரம்', 'ஓடி ஓடி உழைக்கணும்', 'சக்கப் போடு போடு ராஜா', 'மன்னவன் வந்தானடி' ஆகிய நான்கு படங்களில் இரண்டு படங்கள் முழுமையாக முடிவடைந்தும் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றன.

ரிலீஸ் பிரச்னை

ரிலீஸ் பிரச்னை

முழுவதும் முடிந்த இரு படங்கள் தவிர மற்ற இரண்டு படங்களை நேரம் கிடைக்கும்போது படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படங்கள் வெளிவருவதற்கும், படப்பிடிப்பு நடத்துவதற்கும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் சந்தானமும், தயாரிப்பாளர்களும்.

அடிதடி பிரச்னை

அடிதடி பிரச்னை

இதற்கிடையே, சந்தானம், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ரியல் எஸ்டேட் பில்டர் ஒருவரைத் தாக்கியதால் அந்த விஷயமாகவும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருந்ததால் படங்களின் வெளியீட்டு விஷயத்தில் கடந்த சில நாட்களாக கவனம் செலுத்த முடியவில்லை.

அடுத்த படத்தின் ஷூட்டிங்

அடுத்த படத்தின் ஷூட்டிங்

தற்போது 4 படங்கள் ரிலீசாகாமல் இருக்கும் நிலையில், ஐந்தாவதாக மற்றுமொரு புதிய படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்க உள்ளார். தேனாண்டாள் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ராஜேஷ் இயக்க உள்ள படத்தில்தான் சந்தானம் நாயகனாக நடிக்கப்போகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் ஆரம்பிக்க உள்ளார்களாம்.

சர்வர் சுந்தரம் ரிலீஸ்

சர்வர் சுந்தரம் ரிலீஸ்

இதனிடையே நீண்டகாலமாக முடங்கிப் போயிருக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தை எப்படியாவது வெளியிட்டுவிட வேண்டும் என சந்தானம் தரப்பிலும் தயாரிப்பாளர் தரப்பிலும் முயற்சிகள் எடுத்து வருகிறார்களாம். இந்தப் படம் ரிலீஸ் ஆனால், அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்யவும் சுலபமாக இருக்கும் எனக் கருதுகிறார் சந்தானம்.

English summary
Santhanam's last Four films are not yet released and now he yet to be cast as a hero in a fifth film. This film is produced by Thenandaal Films. This film's shooting will be started soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil