»   »  காலேஜ் ட்யூட்ஸை வளைக்க சந்தானத்தின் புது திட்டம்!

காலேஜ் ட்யூட்ஸை வளைக்க சந்தானத்தின் புது திட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சந்தானம் நடிப்பில் 'சர்வர் சுந்தரம்', 'சக்க போடு போடு ராஜா', 'ஓடி ஓடி உழைக்கணும்' எனப் பல படங்கள் உருவாகி வருகின்றன. ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்த 'தில்லுக்குத் துட்டு' கடந்த ஆண்டு ஜூலையில் வெளியானது. அந்தப் படம் வெளிவந்து ஓராண்டு முடிந்து விட்ட போதும் இன்னும் அதற்கடுத்த படத்தை அவரால் வெளியிட முடியவில்லை.

'சர்வர் சுந்தரம்' படத்தை ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட நினைத்தார். ஆனால், அஜீத்தின் 'விவேகம்' வெளியாகவிருந்ததால் ஆகஸ்ட் கடைசி வாரத்திற்கு ரிலீஸ் தேதியை மாற்றினார். ஆனால் எதிர்பாராதவிதமாக அஜீத்தின் விவேகம் ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு மாறியதால், இப்போது செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்.

 Santhanam's new plan to attract College dudes

அதையடுத்து இரண்டே மாதங்களில் 'சக்க போடு போடு ராஜா' படத்தை வெளியிடுகிறாராம். இதுவரை மூன்று படங்களில் நாயகனாக நடித்து விட்ட சந்தானம், ஆனந்த் பால்கி இயக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தில் காமெடி ஹீரோ என்பதில் இருந்து விடுபட்டு ஆக்ஷன் கலந்த எமோஷனல் ஹீரோவாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறாராம். இந்தப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி நடிக்கிறார்.

 Santhanam's new plan to attract College dudes

இந்தப் படத்தில் கல்லுரி இளைஞர்களை தியேட்டர்களுக்கு இழுக்கும் முயற்சியாக, அவர்கள் மற்றவர்களை கலாய்க்க, பெண்களை கிண்டல் செய்யப் பயன்படுத்தும் வார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறாராம். அதற்காக தனது கதை இலாகாவில் சில கல்லூரி மாணவர்களையும் அமரவைத்து அவர்கள் பேசிக்கொள்ளும் கலோக்கியலான வார்த்தைகளைப் படத்தில் சேர்த்துக் கொண்டுள்ளாராம் சந்தானம்.

English summary
'Server sundaram' release was postponed due to 'Vivegam'. Santhanam speaks trendy college words to attract college youths in 'server sundaram' movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil