»   »  சந்தானம் ஹீரோவாக நடிக்கும் சர்வர் சுந்தரம்... நாகேஷ் போல சாதிப்பாரா?

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் சர்வர் சுந்தரம்... நாகேஷ் போல சாதிப்பாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏவிஎம் தயாரிப்பில் அறுபதுகளில் வெளியாகி தமிழ் சினிமாவில் புதிய போக்கை உருவாக்கிய படம் சர்வர் சுந்தரம்.

கே பாலச்சந்தர் திரைக்கதை வசனம் எழுதிய இந்தப் படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தனர். நடிப்பில் நாகேஷ் தனி இலக்கணம் வகுத்த படம் இது.

Santhanam's next Server Sundaram

இநதப் படத்தைத்தான் சந்தானத்தை நாயகனாக வைத்து ரீமேக் செய்கிறார்கள். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ செல்வகுமார் என்பவர் தயாரிக்க, ஆனந்த் பால்கி இயக்குகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, பிகே வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் தலைப்பை முறைப்படி ஏவிஎம் நிறுவனத்திடம் கேட்டுப் பெற்று பயன்படுத்தியுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சந்தானம் சமீபத்தில் ஹீரோவாக நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மற்றும் இனிமே இப்படித்தான் ஆகிய மூன்றுமே முதலுக்கு மோசமில்லாமல் ஓடிவிட்டன. இவற்றில் முதல் படமும் மூன்றாவது படமும் கே பாக்கியராஜின் இன்று போய் நாளை வா மற்றும் சின்ன வீடு படங்களின் கதைகளைத் தழுவியவை. இரண்டாவது படம் தெலுங்கு ரீமேக்.

இப்போது உருவாகும் சர்வர் சுந்தரமும் கிட்டத்தட்ட தழுவல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வர் சுந்தரம் சந்தானத்தின் முதல் பார்வை போஸ்டர் டிசைனை வெளியிட்டவர் யார் தெரியுமா... அவரது நெருங்கிய நண்பர் உதயநிதி ஸ்டாலின்!

English summary
As reported earlier, Santhanam's new film with director Anand Balki has been titled as Server Sundaram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil