»   »  ஆவறது ஆவட்டும்... விஜய்யோடு மோதத் தயாராகும் சந்தானம்!

ஆவறது ஆவட்டும்... விஜய்யோடு மோதத் தயாராகும் சந்தானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதல் நிலை காமெடியனாக கொடிகட்டிப் பறந்த சந்தானம் இப்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார்.

அடுத்து தான் ஹீரோவாக நடிக்கும் படங்களை முக்கிய விசேஷ தினங்களில் ரிலீஸ் செய்தால் என்ன என்ற யோசனை அவருக்கு.

Santhanam's Server Sundaram to compete with Vijay's Bhairava

அதை உடனே செயல்படுத்தவும் போகிறார். ஆமாம்.. அவர் நடித்த சர்வர் சுந்தரம் படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிடத் திரையிடத் திட்டமிட்டுள்ளாராம். ஆனந்த் பால்கி இயக்கியுள்ள சர்வர் சுந்தரம் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்தப் பொங்கலுக்கு சோலோவாக விஜய் படம் பைரவா வெளியாகும் என பாக்ஸ் ஆபீஸில் பேசப்பட்டு வந்த நிலையில், அதில் முதல் கல்லை வீசியவர் விஷால். இப்போது போட்டிக்கு சந்தானம் களமிறங்குவது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஆக இந்தப் பொங்கலுக்கு விஜய்யின் பைரவாவுடன் விஷாலின் கத்தி சண்டை மற்றும் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் மல்லுக் கட்டப் போகிறது.

English summary
Sources say Santhanam's Server Sundaram is also joining in Pongal 2017 race.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil