»   »  சந்தானம் - சேது கூட்டணியில் செப்டெம்பர் 24 முதல் "வாலிப ராஜா"

சந்தானம் - சேது கூட்டணியில் செப்டெம்பர் 24 முதல் "வாலிப ராஜா"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2013 ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கண்ணா லட்டு தின்ன ஆசையா, இந்தப் படத்தில் நடித்த நட்சத்திரங்களின் நடிப்பில் மீண்டும் ஒரு நகைச்சுவை படம் உருவாகியுள்ளது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் 2 ம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு வாலிபராஜா என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.

விடுமுறை தினமான பக்ரீத் கொண்டாட்டத் தினத்தில்(செப்டெம்பர் 24) சந்தானத்தின் வாலிபராஜா திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா

கண்ணா லட்டு தின்ன ஆசையா

2013 ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கண்ணா லட்டு தின்ன ஆசையா. சந்தானம், சேது, பவர்ஸ்டார் சீனிவாசன், விசாகா சிங், தேவதர்ஷிணி, கோவை சரளா, விடிவி கணேஷ் போன்ற நட்சதிரங்களின் நடிப்பில் வெளிவந்த இந்தப்படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. சுமார் 3 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 6 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்தது.

வாலிபராஜா

வாலிபராஜா

தற்போது 2 வருடங்களுக்குப் பின்பு அதே நட்சத்திரங்களின் கூட்டணியில் வாலிபராஜா திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்தமுறை படத்தில் ஜெயப்பிரகாஷ், நான்கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் புதிதாக இணைந்திருக்கின்றனர்.

சாய் கோகுல் ராம்நாத்

சாய் கோகுல் ராம்நாத்

வாலிபராஜா படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சாய் கோகுல் ராம்நாத். இவர் இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது "இதுவரை சினிமாவில் எத்தனையோ குடும்பங்களைப் பார்த்து இருப்பார்கள். ஆனால் இப்படத்தில் வரும் ஒரு குடும்பத்தினர் வித்தியாசமாக இருப்பார்கள், அவர்களது ஒவ்வொரு செயலும் பேச்சும் சிரிக்க வைக்கும்.'' என்று தெரிவித்து இருக்கிறார்.

வாலிபராஜாவாக சந்தானம்

வாலிபராஜாவாக சந்தானம்

சந்தானம் டாக்டர் வாலிப ராஜா என்கிற முக்கிய வேடமேற்று நடித்துள்ள படமிது. சந்தானத்தின் தோற்றம் ஹாலிவுட் இயக்குநர் வுடி ஆலனை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அவர் இதில் ஒரு சைக்கிரியாட்டிஸ்டாக வருகிறார். அவர் கோணத்தில் வரும் ஒரு வித்தியாசமான குடும்பம்தான் கதையின் மையம். அவர்களின் பிரச்சினையை சந்தானம் எப்படித் தீர்க்கிறார்? என்பதை நகைச்சுவை கலந்து காட்சிபடுத்தியிருக்கிறாராம் இயக்குநர் சாய் கோகுல் ராம்நாத்.

இந்தியாவின் முதல் காமெடி

இந்தியாவின் முதல் காமெடி

இந்தியாவில் இதுவரை எத்தனையோ சைக்கோ கதைகள் வந்திருந்தாலும் வாலிபராஜா திரைப்படம் அவற்றில் இருந்து சற்றே வேறுபட்டு நிற்கிறது. ஆமாம் இந்தியாவின் முதல் சைக்கோ காமெடித் திரைப்படம் வாலிப ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

வாலிபா(ராஜா) வா வா....

English summary
The upcoming comedy film titled ‘Vaaliba Raja’ will be releasing on Sept. 24. The film has been made under the direction of Sai Gokul Ramanath. The movie features Santhanam, Sethu, and Vishakha Singh in leading roles, while Nushrat Bharucha, Jayaprakash, Devadarshini and Chitra Lakshmanan will be seen playing supporting roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil