சந்தானம் மகனா இது?.. சூர்யாவுடன் செம போஸ்.. ஜோதிகா மகளுக்கும் விஜய் மகனுக்கும் போட்டி ரெடி!
சென்னை: நடிகர் சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய மகனா என அவரது லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் எல்லாருமே ஷாக் ஆகிவிட்டனர். அப்பாவை விட அந்தளவுக்கு மகன் நெடு நெடுவென வளர்ந்து நிற்கிறார். சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் சந்தானம் சந்தித்த நிலையில், அவரது மகன் அருகே உள்ள புகைப்படம் தீயாக பரவி வருகிறது.
விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் காமெடி ஹீரோவாக என்ட்ரி கொடுத்து சின்னத்திரையிலேயே பல கோடி தமிழ் மக்களை சிரிக்க வைத்த சந்தானம் வெள்ளித்திரைக்கு சிம்புவின் உதவியால் வந்து பல ஆண்டுகள் டாப் காமெடியனாக கெத்துக் காட்டினார்.

இனிமேல் இப்படித்தான் என காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக மாறிய சந்தானம் மீண்டும் காமெடி நடிகராக போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், சிம்புவுடன் அவர் இணைந்த படம் டேக் ஆஃப் ஆகவில்லை.
சந்தானத்தின் மகனா இது?: நடிகர் சந்தானம் 2004ம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு நிபுண் மற்றும் ஹாசினி என 2 குழந்தைகள் உள்ளனர். இந்த ஆண்டு வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ப்ரோமோஷனின் போது தனது மகன் 12வது படித்துக் கொண்டிருப்பதாக சந்தானம் சொல்லியிருந்தார். இந்நிலையில், நிபுணின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சூர்யாவுடன் செம போட்டோ: சமீபத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் நடிகர் சூர்யாவை தனது மகன் நிபுண் உடன் சந்தானம் சந்தித்த புகைப்படம் கோலிவுட்டில் செம டிரெண்டாகி வருகிறது. சூர்யாவுடன் சந்தானம் சில்லுனு ஒரு காதல், சிங்கம் 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கருப்பு படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் சூர்யா அடுத்து வெங்கி அட்லூரி படத்தில் நடித்து வரும் நிலையில், அந்த லுக்கில் செம மாஸாக உள்ளார்.

விஜய் மகன், சூர்யா மகளுடன் போட்டி?: நடிகர் சந்தானத்தின் மகன் ஹீரோவாகவோ அல்லது நடிகராகவோ வர விரும்பவில்லையாம். விஜய் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் சூர்யா மகள் தியா போல இவருக்கும் இயக்கத்தில் தான் ஆர்வம் அதிகம் என சந்தானம் சில மாதங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்கம் தொடர்பான படிப்பை கல்லூரியில் படித்து விட்டு இவரும் டைரக்டராக வரப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











