»   »  போதை பொருள் வச்சு இருக்குறீங்களா...சந்தோஷ் நாரணயணை தொல்லை செய்த அதிகாரிகள்

போதை பொருள் வச்சு இருக்குறீங்களா...சந்தோஷ் நாரணயணை தொல்லை செய்த அதிகாரிகள்

By: Shyam
Subscribe to Oneindia Tamil

சிட்னி: இசையமைப்பாளர் சந்தோஷ் நாரணயணன் போதை பொருள் வைத்து இருக்கிறாரா என்று சிட்டி விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் அவர் மிகவும் கோவமாக அந்த விமான நிலைய அதிகாரிகளிடம் பேசி இருக்கிறார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாரணயணன் பொதுவாக எந்தத் பாடலாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் இருந்து டியூன் போடுவது வழக்கம். சிறிய பட்ஜெட் படமாக இருந்தால் கூட டியூன் போடா ஆஸ்திரேலியாவுக்கு பறந்துவிடுவார்.

Santhosh Narayanan accuses Sydney Airport officials after checking

அப்படி அவர் ஆஸ்திரேலியா சென்றுவிட்டு திரும்பிய போது நேற்று விமான நிலையத்தில் மோசமாக நடத்தப்பட்டு இருக்கிறார். சிட்னி விமான நிலையத்தில் அவர் நின்று கொண்டிருந்த போது அங்கு இருந்த அதிகாரிகள் அவரை அழைத்து ''கெமிக்கல் சோதனை' செய்து இருக்கின்றனர்.

இது போதை பொருள் பயன்பாட்டை கண்டுபிடிக்கும் சோதனை ஆகும். அங்கு பல பேர் இருந்தாலும் அவர் மட்டும் தனியாக சோதனை செய்யப்பட்டு இருக்கிறார்.

இதையடுத்து சந்தோஷ் நாரணயணன் அந்த அதிகாரிகளிடம் இது குறித்து கோபமாக பேசி இருக்கிறார். இது இயல்பாக நடக்கும் விஷயம்தான் மத்தபடி இதில் உள்நோக்கம் இல்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

English summary
Santhosh Narayanan accuses Sydney Airport officials after checking him fro drugs.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil