»   »  குடும்பத்தோடு ரஜினியைச் சந்தித்து 'மகிழ்ச்சி' அடைந்த சந்தோஷ் நாராயணன்!

குடும்பத்தோடு ரஜினியைச் சந்தித்து 'மகிழ்ச்சி' அடைந்த சந்தோஷ் நாராயணன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது குடும்பத்தினருடன் போய் ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கபாலி படத்துக்கு இசையமைத்ததன் மூலம் முதல் நிலை இசையமைப்பாளராகி விட்டவர் சந்தோஷ் நாராயணன். அவரது இசையில் உருவான நெருப்புடா பாடல் இதுவரை எந்த ரஜினி படத்தில் இல்லாத அளவுக்கு பரபரப்பான தீம் பாடலாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

Santhosh Narayanan gets blessings of Rajinikanth

மாய நதி, வீரத் துரந்தரா, உலகம் ஒருவனுக்கா போன்ற கபாலியின் பாடல்கள்தான் இன்றும் ஆடியோ மார்க்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன.

Santhosh Narayanan gets blessings of Rajinikanth

கபாலி பெற்ற பெரும் வெற்றிக்குப் பிறகு சந்தோஷ் நாராயணன் நேற்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது சந்தோஷ் நாராயணனையும் அவரது குடும்பத்தினரையும் வாழ்த்தினார் ரஜினி.

இந்த சந்திப்பு தந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது என்று கூறி, அந்தப் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் சந்தோஷ் நாராயணன்.

English summary
Kabali Music director Santhosh Narayanan has met superstar Rajinikanth on yesterday and got his blessings.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil