»   »  மீண்டும் ரஜினி - ரஞ்சித்துடன் இணையும் சந்தோஷ் நாராயணன்!

மீண்டும் ரஜினி - ரஞ்சித்துடன் இணையும் சந்தோஷ் நாராயணன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த 'கபாலி' படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றன. இணையத்தில் அதிகம் பார்க்கப்படும் வீடியோக்களாக இன்றும் திகழ்கின்றன.

இவ்வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது. 'கபாலி' படத்தைத் தொடர்ந்து ரஜினியை வைத்து பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்துக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Santosha Narayanan in Rajini - Pa Ranjith project

இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, வாய்ப்புத் தந்த சூப்பர் ஸ்டார், தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் இயக்குநர் ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மும்பையை மையப்படுத்தி நடக்கும் கதை இது என்று கூறப்படுகிறது.

ரஜினி - பா ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணிக்கு இப்போதே பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

English summary
Santosh Narayanan has signed for Rajini - Pa Ranjith's next project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil