»   »  பிரபல நடிகரின் மகளுக்கு பிகினியால் வந்த பிரச்சனை

பிரபல நடிகரின் மகளுக்கு பிகினியால் வந்த பிரச்சனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆமீர் கானின் படமான தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் ஆடிஷனுக்கு சென்ற சயிப் அலி கானின் மகள் சாராவை இயக்குனர் ஆதித்யா சோப்ரா நிராகரித்துள்ளார். பிகினி காட்சியால் கரண் ஜோஹாரின் படத்தில் நடிக்க முடியாமல் உள்ளார் சாரா.

பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் முதல் மனைவியான அம்ரிதா சிங் மூலம் பிறந்தவர் சாரா அலி கான். அம்ரிதாவுக்கு தனது மகள் சாராவை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க ஆசை.

அதே சமயம் பல கன்டிஷன்கள் போடுகிறார்.

ஆமீர் கான்

ஆமீர் கான்

ஆதித்ய சோப்ராவின் இயக்கத்தில் ஆமீர் கான் நடிக்க உள்ள தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் பட ஆடிஷனுக்கு சாரா சென்றுள்ளார். அவரை பார்த்த ஆதித்யாவுக்கு சாரா ஹீரோயின் மெட்ரீயல் போன்று தெரியாததால் நிராகரித்துள்ளார்.

கரண் ஜோஹார்

கரண் ஜோஹார்

பல பாலிவுட் வாரிசுகளை அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் கரண் ஜோஹார் சாராவை தனது ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படம் மூலம் அறிமுகம் செய்து வைக்க நினைக்கிறார்.

சாரா

சாரா

ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தில் சாரா பிகினி காட்சியில் நடிக்க வேண்டும். இதற்கு அம்ரிதா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். படம் இன்னும் துவங்கிய பாடு இல்லை.

கரீனா

கரீனா

சயிப் அலி கானின் தாய் சர்மிளா தாகூர், தங்கை சோஹா, இரண்டாவது மனைவி கரீனா கபூர் ஆகியோர் படங்களில் பிகினி அணிந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sara Ali Khan's Bollywood debut is getting delayed by bikini issue. In the mean while, Sara got rejected by director Aditya Chopra.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil