twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ”சரபம்” -சூதுகவ்வும், தெகிடி வரிசையில் வந்துள்ள புதிய படம்

    |

    சென்னை: தமிழில் தெகிடி, பீட்சா, சூதுகவ்வும் பட வரிசையில் புதியாய் இணைந்துள்ளது "சரபம்" திரைப்படம்.

    இதன் டீசரிலேயே கதாநாயகனை தலைகீழாய் தொங்கவிட்டு "இந்த ஆங்கிள்ள நான் மொட்டை மாடியை நான் பார்த்ததே இல்லை" என்று கூலாக சொல்ல வைத்து படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றி இருந்தனர்.

    பண மோசடிகளின் மற்றொரு பிம்பமாகத்தான் வந்துள்ளது என்றாலும், சுவாரசியமாக கதை சொல்லியிருக்கின்றார் இயக்குனர்.

    சிங்கத்தை வீழ்த்தும் பறவை:

    சிங்கத்தை வீழ்த்தும் பறவை:

    சரபம் என்பது பழங்காலத்தில் காணப்பட்டதாக கூறப்படும் சிங்கத்தையே கொல்லும் வல்லமை உடைய எண்கால் பறவை.

    வீழ்த்தும் வல்லமை:

    வீழ்த்தும் வல்லமை:

    அதே போலத்தான் ஒருவர் நினைத்தால் எப்படிப்பட்ட மனிதர்களையும் சாய்த்து, வீழ்த்தி விடலாம் என்று வந்துள்ளது இத்திரைப்படம்.

    நாயகனின் நடிப்பு தூள்:

    நாயகனின் நடிப்பு தூள்:

    இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நவீன் சந்த்ரா முதல் பார்வையிலேயே மனதில் ஒட்டிக் கொள்கின்றார். அழகான முகபாவனைகளால் நம்மை ஈர்த்து விடுகின்றார்.

    அழகான ராட்சசி சலோனி:

    அழகான ராட்சசி சலோனி:

    நவீனுக்கு ஜோடியாக நடித்துள்ள நாயகி சலோனி லுத்ரா தந்தையை "எனக்குப் பணம் வேணும்" என்று மிரட்டும் போதும் சரி, "எங்கப்பா என்னை விட டார்ச்சர்" என்று கூறும்போது சரி துறுதுறுவென்றுதான் இருக்கின்றார்.

    பணக்கார அப்பா நரேன்:

    பணக்கார அப்பா நரேன்:

    கோட், சூட்டில் அசத்தலாய் வரும் நரேன், சலோனியின் தந்தையாய் கதையை நன்றாக நகர்த்தியுள்ளார். பணம், பணம் , பணம் மட்டுமே படம் முழுவதும் அடிப்படைக் குறிக்கோளாக உள்ளது.

    மாட்டிக்காமல் தப்பு செய்:

    மாட்டிக்காமல் தப்பு செய்:

    ஒரு தவறை மாட்டிக் கொள்ளாமல் செய்து எப்படி பணம் சம்பாதிப்பது என்பதையும், அதனால் என்னென்ன வில்லங்கங்களை நாயகனும், நாயகியும் சந்திக்கிறார்கள் என்பதுதான் கதைச்சுருக்கம்.

    சுற்றிச் சுழலும் படக்கதை:

    சுற்றிச் சுழலும் படக்கதை:

    படம் முழுவதுமே நவீன், சலோனி, நரேனையே சுற்றிச் சுழல்கின்றது. இப்படத்தினை அருண் மோகன் இயக்கி உள்ளார். கிருஷ்ண வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    வரவேற்பு எப்படி? :

    வரவேற்பு எப்படி? :

    பிரிட்டோ மைக்கேல் இசையில் உருவாகி வெளிவந்துள்ள இப்படத்திற்கும் தெகிடி, பீட்ஸா படங்களைப்போல நல்ல வரவேற்பு கிடைக்கின்றதா என்பதைப் போகப் போகதான் பார்க்க வேண்டும்.

    English summary
    Sarabam film released today. That film’s main purpose is Money. It is a lead of Thegidi, pizza films, director says.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X