Don't Miss!
- News
மறைந்தது குயில்..பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நடிகை சரோஜா தேவி வீட்டில் வரலக்ஷ்மி விரதம்.. நடிகர் மனோபாலா ஷேர் செய்த புகைப்படம்.. செம வைரல்!
சென்னை: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி வீட்டில் நடைபெற்ற வரலக்ஷ்மி விரதம் பூஜையின் புகைப்படத்தை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.
83 வயதாகும் நடிகை சரோஜா தேவின் இன்னமும் அதே மிடுக்குடன் தோற்றமளிக்கும் இந்த புகைப்படம் ஒட்டுமொத்த சரோஜா தேவி ரசிகர்களுக்கும் நிச்சயம் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்.
தனது 17வது வயதில் கன்னடத்தில் வெளியான மகாகவி காளிதாஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சரோஜா தேவி.
சிறந்த நடிகர் சூர்யா.. சிறந்த நடிகை சமந்தா.. மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் அசத்தல்!

கன்னடத்து பைங்கிளி
பெங்களூருவை சேர்ந்த சரோஜா தேவி இயக்குநர் சீதாராம சாஸ்த்ரி இயக்கத்தில் 1955ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வந்த அவர் 1956ம் ஆண்டு திருமணம் எனும் தமிழ் படத்தில் நடித்து தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தார். நடிகை சரோஜா தேவியை கன்னடத்து பைங்கிளி என ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.

தங்கமலை ரகசியம்
ஜெமினி கணேசனின் திருமணம் படத்தில் நடித்த சரோஜா தேவி அடுத்ததாக சிவாஜியின் தங்கமலை ரகசியம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அழகான முகமும் அற்புதமான நடிப்பும் கொண்ட சரோஜா தேவிக்கு தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தன.

எம்.ஜி.ஆர் ஜோடி
ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனை தொடர்ந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சரோஜா தேவி. படகோட்டி, அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை என ஏகப்பட்ட ஹிட் படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

விஜய்யுடன்
1997ம் ஆண்டு வெளியான நடிகர் விஜய்யின் ஒன்ஸ்மோர் படத்திலும் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை சரோஜா தேவி. தொடர்ந்து ஏகப்பட்ட கன்னட படங்களிலும், தெலுங்கு படங்களிலும் குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

சூர்யா படத்தில்
கடைசியாக தமிழில் நடிகர் சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ஆதவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் சரோஜா தேவி. அதன் பிறகு பத்து ஆண்டுகள் இடைவெளி விட்டு 2019ல் வெளியான புனித் ராஜ்குமாரின் கன்னட படமான நாதசர்வபொம்மா படத்தில் சரோஜா தேவியாக வந்து கலக்கினார்.

கோடீஸ்வரி
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு போட்டியாளராக கலந்து கொண்ட சரோஜா தேவி அதன் பிறகு தற்போது தான் லைம் லைட்டுக்கு வந்துள்ளார். 83 வயதாகும் நடிகை சரோஜா தேவி இன்னமும் அதே மிடுக்குடன் இருந்து வருகிறார்.

சரோஜா தேவி வீட்டில் பூஜை
நாடு முழுவதும் வரலக்ஷ்மி விரதம் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை சரோஜா தேவி வீட்டில் நடத்தப்பட்ட பூஜை புகைப்படத்தை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இருவரும் இணைந்து ஆதவன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.