»   »  லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு இன்னொரு ஆள் வந்தாச்சு: இது நயன்தாராவுக்கு தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு இன்னொரு ஆள் வந்தாச்சு: இது நயன்தாராவுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான் என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மகளிர் மட்டும். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜோதிகா கூறும்போது,

ஊர்வசி, பானுப்ரியா

ஊர்வசி, பானுப்ரியா

ஊர்வசிக்கு இயற்கை, வரலாறு பற்றி நன்கு தெரியும். அவர் மிகவும் திறமையானவர். அவருக்கு எல்லா விஷயங்கள் பற்றியும் தெரியும். அருமையாக பாடுவார். செட்டில் பாடிக் கொண்டே இருப்பார். பானுப்ரியா மேடம் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவர் ரொம்ப அழகானவர். படத்தில் அவர் மிகவும் அழகாக இருப்பார்.

சரண்யா

சரண்யா

சரண்யா மேடம் உங்களுக்கு தான் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்க வேண்டும். குடும்பத்தை பார்த்துக் கொள்கிறீர்கள், படங்களில் நடிக்கிறீர்கள். அதே சமயம் டெய்லரிங் யூனிட்டை நடத்தி வருகிறீர்கள். பல பெண்களுக்கு வேலை அளிக்கிறீர்கள்.

மகள்கள்

மகள்கள்

உங்களின் 2 மகள்கள் டாக்டருக்கு படிக்கிறார்கள். அந்த பிரஷரோட நீங்கள் இவ்வளவும் செய்கிறீர்கள். நீங்கள் தான் லேடி சூப்பர் ஸ்டார்.

உங்களுக்கு இருக்கும் திறமையில் பாதி கூட எங்களுக்கு இல்லை. 2டி படத்தில் நடித்ததற்கு நன்றி என்றார் ஜோதிகா.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று ஆளாளுக்கு கூறுகிறார்கள். அவரே ஆள்விட்டு சொல்ல வைப்பதாக பேசப்படும் நேரத்தில் சரண்யாவை லேடி சூப்பர் ஸ்டார் என்றுள்ளார் ஜோதிகா.

English summary
Jyothika said that Saranya Ponvannan is really a lady superstar as she is an expert in multi tasking.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil