Don't Miss!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- News
"ஓவர் ஓவர்".. மின் இணைப்புடன் ஆதாரை இணைச்சிட்டீங்களா?.. 4 நாள்தான் இருக்கு.. அவகாசம் நீட்டிக்கப்படுமா
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
தமிழக நட்சத்திரங்களின் அம்மா சரண்யா பொன்வண்ணன்
கோலிவுட் பட உலகில் அழகான அம்மாவாக வலம் வரும் சரண்யா பொன்வண்ணன்தான் அதிகம் சம்பளம் வாங்கும் அம்மா நடிகையாம்.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகாலமாக அம்மா நடிகையாக வலம் வந்தவர் ஆச்சி மனோரமா தான். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற அவர், பின்னர் பாட்டி நடிகை ஆனார்.

அம்மா நடிகையான எஸ்.என்.லட்சுமி பின்னர் பாட்டியாக பதவி உயர்வு பெற்று பல படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு அவர் காலமானார்.
கோலிவுட் பட உலகில் அம்மா நடிகைகள் பலர் இருந்தாலும் சரியான அம்மா நடிகைகள் அமையவில்லை. இந்த நிலையில், தமிழ் சினிமா உலகில் பெயர் சொல்லும் படியான அம்மா நடிகை இல்லாமல் இருந்த நேரம் சரண்யா களமிறங்கினார்.
1987ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில் நாயகியாக அறிமுகமான இவர், மனசுக்குள் மத்தாப்பு, சீவலப்பேரி பாண்டி, பசும்பொன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர், ஒரு கட்டத்தில் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.