'இட்லி' பேங்கை கொள்ளை அடிக்குதுன்னா சட்னி கூட நம்பாது பாஸ்!

சரண்யா பொன்வண்ணன் நடிக்கும் இட்லி திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது.

Recommended Video

பேங்கை கொள்ளை அடிக்கும் இட்லி-

சென்னை: சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் உருவாகியுள்ள இட்லி திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

அப்பு மூவிஸ் சார்பில் பாபு தூயவன் தயாரித்திருக்கும் படம் 'இட்லி'. சரண்யா பொன்வண்ணன், மறைந்த நடிகை கல்பனா, கோவை சரளா, இமான் அண்ணாச்சி, தேவதர்ஷினி, உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே.வித்யாதரன் படத்தை இயக்கியுள்ளார்.

Saranya Ponvannans Idly movie is ready for release

இன்பா, ட்விங்கிள், லில்லி ஆகிய மூன்று பெயர்களின் முதல் எழுத்துக்களை சேர்த்து, படத்துக்கு இட்லி என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரோடக்ஷன்ஸ் பணியும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

படத்தின் புரோமோஷன் நடவடிக்கையாக, இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாவது போஸ்டரில், மங்காத்தா அஜித் பாணியில், மேசையில் பரப்பிக்கிடக்கும் பணத்தை, சரண்யா, கோவை சரளா, கல்பனா ஆகிய மூவரும் விசிறியடிக்கிறார்கள். தலைப்புக்கு மேலே, "ஷாப்பிங் போறத்துக்கு பணம் இல்லேன்னா பேங்கையே கொள்ளை அடிக்கிறதா?" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இரண்டாவது போஸ்டரில், சரண்யா, கோவை சரளா, கல்பனா ஆகிய மூவரும் போலீஸ்காரர்களான இமான் அண்ணாச்சி மற்றும் தேவதர்ஷினி ஆகியோரை துப்பாக்கி முனையில் கடத்தி வைத்திருப்பது போல் உள்ளது. இதில், "போலீசையே கடத்தி வச்சிருக்கிற இந்த மிடில் கிளாஸ் லேடிஸ் யாரு?" என்ற வாசகம் உள்ளது.

Saranya Ponvannans Idly movie is ready for release

இந்த இரண்டு போஸ்டர்களை பார்த்த உடனேயே நமக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. படக்குழுவின் நோக்கமும் அதுவாகத்தான் இருக்கும்.
மேலும் போஸ்டரை பார்க்கும் நெட்டிசன்கள் இத இட்லின்னா சட்டினி கூட நம்பாது என கலாய்ப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X