»   »  அதுக்கெல்லாம் பயந்தால் முடியுமா?: 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யாவின் மெகா ஆசை

அதுக்கெல்லாம் பயந்தால் முடியுமா?: 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யாவின் மெகா ஆசை

Posted By:
Subscribe to Oneindia Tamil
'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யாவின் மெகா ஆசை

சென்னை: நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் சரண்யாவுக்கு மெகா ஆசை ஏற்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமானவர் சரண்யா. சரண்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர்.

அவர் சீரியலில் அணிந்து வரும் உடையை பார்க்கவே பல பெண்கள் ஆர்வமாக உள்ளனர்.

பெரியதிரை

பெரியதிரை

சின்னத்திரையில் பிரபலமாக உள்ள நடிகைகள் பெரிய திரையில் ஹீரோயினாக நடிப்பது சாதாரண விஷயமாகி வருகிறது. இந்நிலையில் சரண்யாவுக்கு பெரிய திரை ஆசை வந்துள்ளது.

கோலிவுட்

கோலிவுட்

சரண்யா ஏற்கனவே பாபி சிம்ஹாவுடன் சேர்ந்து சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் நடித்துள்ளார். அந்த படம் ஓடவில்லை. தோல்வியை கண்டு பயப்படாமல் மறுபடியும் கோலிவுட் பக்கம் செல்ல விரும்புகிறார்.

சரண்யா

சரண்யா

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான ப்ரியா பவானி சங்கர் கோலிவுட்டின் பிசியான ஹீரோயின்களில் ஒருவராகியுள்ளார். சரண்யாவும் ஹீரோயின் ஆகும் ஆசையில் உள்ளார்.

பட்டதாரி

பட்டதாரி

சரண்யா சென்னையை சேர்ந்தவர். சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எம்.ஏ. பிராட்காஸ்டிங் கம்யூனிகேஷன் படித்த அவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு நியூஸ் ஆங்கராக பணியாற்றியுள்ளார்.

வாழ்த்து

வாழ்த்து

பெரிய திரையில் ஹீரோயின் ஆகும் சரண்யாவின் ஆசை நிறைவேறட்டும் என்று அவரின் ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். என்ன அவர் ஹீரோயினாகிவிட்டால் தினமும் அவரை சீரியலில் பார்க்க முடியாது என்ற வருத்தம் லைட்டாக உள்ளது.

லண்டன்

லண்டன்

இலங்கை தமிழரை காதலித்து திருமணம் செய்தவர் சரண்யா. திருமணத்திற்கு பிறகு லண்டனில் செட்டிலாகப் போவதாக தெரிவித்தார். ஆனால் சென்னையில் தங்கி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

English summary
Nenjam Marappathillai television serial fame Saranya wants to try her luck in Kollywood again. Earlier she acted in Bobby Simha's Chennai Ungalai Anbudan Varaverkirathu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil