»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்:

ஸ்டார் டி.வியில் ஜூனியர் குரோர்பதி என்ற நிகழ்ச்சியைப் போல, தமிழில் குழந்தைகளுக்கான அறிவுத் திறன் போட்டி விரைவில் துவங்கப்படும் என நடிகர்சரத்குமார் தெரிவித்தார்.

ஸ்டார் டி.வியில் அமிதாப்பச்சன் நடத்தும் குரோர்பதி என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா முழுவதிலும் அமோக வரவேற்புகிடைத்தது. ஆனால், தற்போது இந்நிகழ்ச்சிக்கான வரவேற்பு சற்று மங்கத் தொடங்கியது. எனவே, குரோர்பதி நிகழ்ச்சிக்குப் பதிலாக ஜூனியர்குரோர்பதி என்ற தொடரை ஆரம்பிக்கலாமா என்பது குறித்து ஆலோசனைக நடந்து வருகிறது.

இதன் ஜெராக்ஸ் காப்பியாக சன் டி.வி தமிழில் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சி பரபரப்பாக இல்லாவிட்டாலும், ஓரளவு தமிழகமக்களிடையே பெயர் பெற்றது. எனவே, ஸ்டார் டி.வியைப் போலவே இங்கும் ஒரு ஜூனியர் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நடத்தலாம் என்ற யோசனையில் சன்தொலைக்காட்சி நிறுவனம் முயன்று வருகிறது.

இது குறித்து கரூரில் நிருபர்களிடையே பேசிய நடிகர் சரத்குமார் கூறியதாவது:

சன் டி வியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியைப் போலவே குழந்தைகளுக்கும் ஒரு போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம். குழந்தைகளுக்கான அறிவுத்திறனைவளர்க்க இந்த நிகழ்ச்சி பயன்படும். ஆனால் இதில் பணத்திற்குப் பதிலாக பொருளாக குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்.

இந்தப் பொருட்கள் புத்தகமா அல்லது புத்தகத்திற்கான செலவா அல்லது கம்ப்யூட்டரா என்பது பற்றி விவாதித்து முடிவு செய்யப்படும். இன்றைக்குநாட்டின் முக்கியத் தேவையாக இருப்பது கல்வியறிவு தான் என்றார் சரத்குமார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil