»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் சரத்குமார், தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏப்ரல்28-ம் தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

தி.மு.க. தரப்பில் பல திரை நட்சத்திரங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பாண்டியன், தியாகு, சந்திரசேகர் ஆகியோர் ஏற்கனவே பல இடங்களில்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகை ராதிகா தமிழகம் முழுவதிலும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.நடிகர் நெப்போலியன் இந்த முறை வேட்பாளராக களம் கண்டுள்ளார்.

இந்த நிலையில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி புகழ் நடிகர் சரத்குமாரும் பிரசாரக் களத்தில்குதிக்கவுள்ளார். ஏப்ரல் 28-ம் தேதி முதல் அவர் தனது பிரசாரத்தைத்தொடங்குகிறார்.

28-ம் தேதி திருச்செந்தூரில் பிரசாரத்தைத் தொடங்குகிறார் சரத்குமார். நாகர்கோவில்,திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, சேலம், கோவை,ஈரோடு, விழுப்புரம் மற்றும் சென்னையில் அவர் பிரசாரம் செய்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil