»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மைசூர் அருகே சமுத்திரம் படப்பிடிப்பின்போது நடந்த சில கன்னட வெறியர்கள் நடத்திய தாக்குதல் தந்தஅதிர்ச்சியிலிருந்து நடிகர் சரத்குமாரும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் இன்னும் மீளவில்லை.

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பான சமுத்திரம் படத்தில் நடிகர் சரத்குமார், முரளி, கவுண்டமணி, செந்தில்,மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கர்நாடக மாநிலம் மைசூர் அருகே ஸ்ரீரங்கபட்டினா என்ற இடத்தில்சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது.

ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம் போல படப்பிடிப்பு நடந்தது. அப்போது போதையில் இருந்த ஒரு கும்பல்படப்பிடிப்புக் குழுவினருடன் தகராறு செய்துள்ளது. இதையடுத்து படப்பிடிப்புக் குழுவில் இருந்த சிலர் அவர்களைஅங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து அக்கும்பல் ஆத்திரமடைந்து, ஊருக்குள் சென்று, நம் ஆட்களை தமிழர்கள் தாக்கி விட்டார்கள் என்றுகூறியிருக்கிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர்.

படப்பிடிப்புக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை கண் மண் தெரியாமல் தாக்கியுள்ளனர். பயங்கர வெறியுடன்,பயங்கர ஆயுதங்களுடன் அக் கும்பல் தாக்கியதால் அதை சமாளிக்க படப்பிடிப்புக் குழுவினரால் முடியவில்லை.படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த அத்தனை பேருக்கும் அடி விழுந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைத்துப்பொருட்களும் திருடு போயின.

நடிகர் சரத்குமாரின் டாடா சபாரி கார், நடிகர்முரளியின் குவாலிஸ் கார் உள்பட பல கார்கள் அடித்து துவம்சம்செய்யப்பட்டு விட்டன.

காவேரியைக் கற்பழிக்க முயற்சி:

இந்த சம்பவத்தின்போது ஸ்பாட்டில் இருந்த நடிகை காவேரியைப் பார்த்ததும் கும்பலுக்கு மேலும் வெறி கூடியது.அவரைக் கற்பழிக்கும் முயற்சியுடன் சிலர் அவரைத் துரத்தினர். டைரக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட படப்பிடிப்புக்குழுவினர் சிலர் கடும் முயற்சிக்குப் பின் காவேரியைக் காப்பாற்றி ஒரு காரில் அனுப்பி வைத்தனர். அந்தக்காரிலேயே சரத்குமாரின் இரு மகள்களும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இருந்தும் விடாத வன்முறைக் கும்பல், உருட்டுக் கட்டைகளால் அந்தக் காரைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்தவன்முறைத் தாக்குதலில் 20 பேருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. 80 பேருக்கு உடலில் காயம்வருமளவுக்கு அடி விழுந்துள்ளது. அனைவரும் மைசூரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,திங்கள்கிழமை மாலை அனைவரும் சென்னை திரும்பினர்.

சென்னை திரும்பிய நடிகர் சரத்குமாரும், ரவிக்குமாரும் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது ஒரு மோசமானசம்பவம். ஒரு கன்னட வெறியர்கள் கும்பல் தமிழ்நாட்டைச் சேர்ந்த துணை நடிகைகளைக் கேலி செய்தனர்.

இதை யூனிட்டில் இருந்த சிலர் தட்டிக் கேட்டுள்ளனர். இருந்தும் அவர்கள் தொடர்ந்துள்ளனர். இதையடுத்துடைரக்டர் ரவிக்குமார் அவர்களை தட்டிக் கேட்டார். இதைத் தொடர்ந்து அக்கும்பல் ரவிக்குமாரை அடித்துவிட்டனர். இதையடுத்து யூனிட் ஆட்களும் திருப்பித் தாக்கினர்.

அடி வாங்கியவர்கள் ஊருக்குள் சென்று நம்மவர்களை தமிழர்கள் தாக்கி விட்டனர் என்று கூறியுள்ளனர்.இதையடுத்து அந்த ஊர் ஆட்கள் மிகப் பயங்கரமான வெறியுடன் யூனிட் ஆட்களைத் தாக்கினர். எனக்கு ஒன்றுமேபுரியவில்லை. சினிமாவில் வருவது போல அத்தனை பேரையும் அடித்துப் போட்டு விட்டுத் தப்பிப்பது மிகக்கஷ்டம். என் கண் முன்னாள் யூனிட் ஆட்கள் அடி வாங்குவதைப் பார்த்ததும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

அப்போது ஒருவன் அவருதான் சரத்குமாரு, ஹீரோ என்று கன்னடத்தில் கூறினான், ஆனால் அதைக் காதில்வாங்கிக் கொள்ளாமல் என்னையும் வெட்ட வந்தது கும்பல். கடவுள் அருளால் காயமின்றித் தப்பினேன்.

டைரக்டர் ரவிக்குமாருக்கும், மற்றவர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. எனது ரசிகர்கள் இந்த சம்பவத்தால்குமுறிக் கொண்டுள்ளனர். நான் நினைத்தால் அவர்களைத் தூண்டி விட்டு பதிலுக்கு வன்முறையை ஏற்படுத்தியிருக்கமுடியும். ஆனால் அப்படிச் செய்யவில்லை.

இந்த சம்பவம் குறித்து அறிந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, பெங்களூரைத் தொடர்பு கொண்டுள்ளார்.கர்நாடக முதல்வர் கிருஷ்ணா ஊரில் இல்லாததால், போலீஸ் அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேயைத் தொடர்புகொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

கன்னட படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ, நடிகர் அம்பரீஷ் ஆகியோர் நடந்த சம்பவத்திற்குஎன்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள். கர்நாடக மக்கள் நல்லவர்கள். ஆனால், ஒரு சில வெறி பிடித்த கும்பல்கள்தான் இரு மாநில மக்களுக்கும் இடையே பிரச்சனையை உருவாக்க முயல்கின்றன.

அந்தப் பகுதியில் இருந்த சில நல்லவர்களால் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்றார் சரத்குமார்.

"சமுத்திரம்" படப்பிடிப்பில் கலவரம்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil