நீங்கள் ஹீரோ மெட்டிரியல் இல்ல.. பிரதீப்பிடம் செய்தியாளர் கேட்ட கேள்வி.. சரத்குமார் சரியான பதிலடி!

சென்னை: பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டியூட்'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் செய்தியாளர் கேட்ட கேள்வி தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Pradeep Ranganathan dude Sarath Kumar
Photo Credit:

ரங்கஸ்தலம், உப்பேனா, புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் அடுத்தடுத்து பல வெற்றிப்படத்தை கொடுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து கோலிவுட் பக்கம் காலடி எடுத்துவைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி என்ற படத்தை தயாரித்தது. அந்த திரைப்படத்தில் அஜித், த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா என பலர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் நல்ல வசூலை அள்ளியது. குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டியூட் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கவுள்ளார். இவர் சுதா கொங்கராவின் சூரரைப் போற்று படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் பூஜையுடன் தொடங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்து தற்போது படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 17ந் தேதி வெளியாக உள்ளது.

நீங்கள் ஹீரோ மெட்டிரியல் இல்ல: இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் பதில் அளித்து வந்தார். அப்போது, ஒரு செய்தியாளர், பிரதீப் ரங்கநாதனிடம், இந்த கேள்வியை நெகட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் ஒரு ஹீரோ மெட்டிரில் இல்லை, ஆனால் நீங்கள் இப்போது ஹீரோவாகி இருக்கிறார்கள். இதற்கு எது காரணம், விடாமுயற்சியா.. இல்லை அதிர்ஷ்டமா என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் யோசித்தப்படி பதில் சொல்ல தயாரானார். ஆனால், அதற்கு முன்பாக அருகில் அமர்ந்து இருந்த நடிகர் சரத்குமார் மைக்கை வாங்கி, இந்த துறையில் நான் 170 படங்களில் நடித்துள்ளேன்... யார் ஹீரோ மெட்டிரியல் என்பதை நீங்கள் சொல்ல முடியாது. எல்லாரும் ஹீரோ மெட்டிரியல் தான். ஒரு ஹீரோவாக இருப்பதற்கு எந்த விதிமுறையும் இல்லை. சமூகத்திற்கு நல்லது செய்யும் அனைவரும் ஹீரோ தான் என சரியான பதிலடி கொடுத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X