»   »  உளவாளி சரத்... போலீஸ் நெப்ஸ்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு காம்பினேஷன்!

உளவாளி சரத்... போலீஸ் நெப்ஸ்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு காம்பினேஷன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் சரத்குமாரும், நெப்போலியனும் வில்லன்களாக அறிமுகமாகி ஹீரோக்களாக ஜெயித்தார்கள். இருவரும் விஜய்காந்துடன் இணைந்து நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகித்த போது சங்கமே கம்பீரமாக செயல்பட்டது.

நெப்போலின் அரசியலில் நுழைந்து, எம்எல்ஏ, எம்பி, மத்திய அமைச்சர் என வேறு ரேஞ்சுக்குப் போனார். சினிமாவில் நடிக்கவில்லை. பதவிக் காலம் முடிந்ததும் உடல் நிலை பாதிக்கப்பட்ட மகனை கவனித்துக் கொள்ள அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். அரசியல், சினிமா இரண்டையுமே விட்டு நான்கைந்து ஆண்டுகள் விலகி இருந்தார்.

Sarath Kumar - Nepolean acting together after 12 years

இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் சமீபத்தில் நடித்து வெளியான படம் முத்துராமலிங்கம். இப்போது சென்னையில் ஒரு நாள் - 2 படத்தி சரத்குமாருடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார். இதில் சரத்குமார் உளவாளி பாத்திரத்திலும், நெப்போலியன் போலீஸ் வேடத்திலும் நடிக்கிறார்கள்.

எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் த்ரில்லர் கதைகளில் ஒன்றுதான் இந்தப் படம்.

12 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஐயா படத்தில்தான் கடைசியாக சரத்குமாரும், நெப்போலியனும் நடித்தனர். அதற்கு முன் ஊர் மரியாதை, தென்காசிப் பட்டணம் போன்ற படங்களில் நடித்தனர்.

சென்னையில் ஒரு நாள் 2 பத்தை அறிமுக இயக்குநர் ஜெபிஆர் இயக்குகிறார்.

இப்படத்தில் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்மன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 'நிசப்தம்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாதன்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம்மோகன் இப்படத்தை தயாரிக்கிறார்.

English summary
Sarath Kumar and Nepolean join for a movie titled Chennaiyil Oru Naal - 2 after 12 years.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil